வேதத்தினூடாக அடையும் நன்மைகள் உலகியல் சார்ந்தவை. அவற்றை சம்சாரம் என்று கூறுகிறோம். இவை சார்பு நிலையானவை. இவற்றையெல்லாம் வார்த்தைகளினூடாக மானுடன் அறிகிறான். ஆனால் வார்த்தையில் அடங்கியுள்ள வேறு ஒரு ரகசியம் உண்டு. அதை நாதம் எனலாம். மூதாதையர் சொல்லை இணைத்து செய்யுள் உருவாக்கினர். வேத மந்திரங்கள் நான்கு வரிகளினாலானவை. அவற்றை இரண்டிரண்டாகப் பிரித்தால் அவை நான்கு நான்கு எழுத்துக்களாகும். அதை ‘அனுஷ்டுப்பு சந்தம்’ என்பர். சொல் இவ்வாறு பற்பல சந்தங்களில் நிறுவப்பட்டுள்ளது. சந்தமொன்றில் நிறுவப்படாத சொல் இல்லை. … Continue reading மொழியும் பிரபஞ்சமும் – 2