4.2.1996 காலையில் எட்டுமணிக்கு யதி நடக்கக் கிளம்புவதை ஒரு பிரம்மசாரி தட்டி எழுப்பிச் சொன்னார். அவசரமாக முகம் மட்டும் கழுவிவிட்டு ஓடிச்சென்றோம். கோட்டும் தொப்பியும் கைத்தடியுமாக யதி நின்று கொண்டிருந்தார். யதி காலை ஐந்துமணிக்கு எழுந்திருப்பார். இசை கேட்பார். பிறகு தியானம். பிறகு கடிதங்கள். குருகுல முகப்பில் பெரிய சைப்ரஸ் மரங்களின் இலைகளில் பனித்துளிகள் மணிகள் போல ஒளிவிட்டன. கிழக்குப் பக்கமாகத் திரும்பி நடந்தார். எதிரே வரும் குழந்தைகள் ‘குரு’ என்று கீச்சுக் குரலில் கூவியபடி ஓடிவந்தன. … Continue reading நேர்காணல் – 6