ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 26

அவயவமொக்கெயமர்த்தியாணியாய் நி ன்னவயவியாவியெயாவரிச்சிடுந்நு; அவனிவனென்னதினாலவன் நினய்க்கு ன்னவஶதயாமவிவேகமொன்னினாலே (ஆத்மோபதேஶ ஶதகம் - பாடல் 26) ஆணிபோல் உறுப்புகளை ஒன்றிணைக்கும் ஆவிபோன்றதை மூடியிருக்கும் உடல்கொண்டவன் அவிவேகத்தாலே ‘அவன்’ ‘இவன்’ என எண்ணிச் சோர்கிறான் பல உறுப்புகளால் ஆன நமது உடல், வாழும் உயிர் என்ற ஒன்றால் பிணைக்கப்பட்டுள்ளது. ஆவித்தன்மை கொண்ட மூச்சு எனும் முகமையால் ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டமைக்கப்பட்ட ஒரு உடலின் தோற்றம் பிறிதொரு உடலிலிருந்து மாறுபடுவதால், அனைத்து உயிரிகளிலும் உறையும் உயிர் எனும் பொருள் ஒன்றே … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 26

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 22

ப்ரியமபரன்றெயதென் ப்ரியம்; ஸ்வகீய ப்ரியமபரப்ரியமிப்காரமாகும் நயமதினாலெ நரன்னு நன்ம நல்கும் க்ரியயபரப்ரியஹேதுவாய் வரேணம் (ஆத்மோபதேச சதகம் : பாடல் 22) பிறன்நலம் என்நலமாகும் தன்நலம் பிறன்நலமாகும் தன்நலம் பயக்கும் செயலெல்லாம் பிறன்நலம் கருதல் வேண்டும் ஒரு புழுவானாலும் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் யோகியானாலும் ஒரு ஜீவராசியின் வாழ்வை கவனித்தால் அதன் அனைத்துச் செயல்களும் இன்ப வேட்கையால் தூண்டப்படுபவையே என்பது தெரியும். தூண்டல்கள் தன்னுணர்வுடனும் தோன்றலாம், நனவிலி நிலையிலும் தோன்றலாம். இங்கு அமர்ந்திருக்கையில் நிலைமாறி அமர்வதுகூட இன்னும் வசதியுடன் இருப்பதற்காகத்தான். … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 22

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 16

அதிகவிஷால மரு ப்ரதேஷமொன்னாய் நதி பெருகுந்நதுபோலெ வன்னு நாதம் சுருதிகளில் வீணு துரக்குமக்ஷியென்னும் யதமியலும் யதிவர்யனாயிடேணம் அகன்று விரிந்த பெரும் பாலையில் ஆற்று வெள்ளம் போலே வரும் ஒலி செவி நிறைக்க கண்கள் திறக்கும் எதுவும் பாதிக்காத உன்னத யதியாகவேண்டும்                                                     … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 16

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 15

பரயுடெ பாலுநுகர்ன்ன பாக்யவான்மார்க் கொரு பதினாயிரமாண்டொரல்பநேரம் அறிவபரப்ரக்ருதிக்கதீனமாயா லரநொடியாயிரமாண்டுபோலெ தோன்னும் பரத்தின் பால் நுகர்ந்த பேறுபெற்றோருக்கு பதினாயிரமாண்டென்பது ஒரு கணமே அபரஉலகுக்கு அறிவு அடிமையானாலோ அரை நொடியும் ஆயிரமாண்டாக தோன்றுமே                             (ஆத்மோபதேச சதகம் – பாடல் 15) சிலர் எப்போதுமே ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.  அவர்களுக்கு அழுவதற்கு ஒரு காரணம் வேண்டும்.  அவர்களைச் சுற்றி எப்போதுமே இருள்தான்.  ஆயினும் அவர்களை நாம் கெட்டவர்கள் என்று சொல்லமுடியாது.  அவர்களது மனம் மிகவும் நுட்பமானது (tender), பிறரது … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 15

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 14

திரிபுவன சீம கடந்நு திங்கிவீங்கும் திரிபுடி முடிஞ்ஞு தெளிஞ்ஞிடுன்ன தீபம் கபடயதிக்கு கரஸ்தமாகுவீலெ ன்னுபநிஷதுக்தி ரஹஸ்யமோர்த்திடேணம் மூவுலகெல்லை கடந்து பொங்கும் மும்மடி அறிவொடுங்கி ஒளிரும் தீபம் கபடமுனிக்கு கைவசமாகாதென்னும் உபநிடத மறையை மனதிலிருத்துவாய்.                                                              (ஆத்மோபதேச … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 14

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12

தோலுமெலும்பும் மலமும் துன்பம்தரும் நாற்றங்களுமேந்தும் அகந்தையை காண்க அழியும் இதுவேறு அழிந்து முழுமையாகும் பெருமகந்தை வந்திடா வரம் அருள்க                                                              ஆத்மோபதேச சதகம் – பாடல் 12 முந்தைய பாடல்களில், அடுத்தடுத்து வைக்கப்பட்ட இரு பண்புக்கூறுகளை விவரித்தோம்.  ஒன்று நோக்கிநிற்கும் அகம்.  மற்றொன்று உடற்செயல்பாடுகளிலும் பல்வேறு மனமாற்றங்களிலும் சிக்கிகொண்டுள்ள நனவு.  ஒருவன் தன் மெய்மையை கண்டெடுக்க முயலுகையில் அவன் தனது மெய்சார் அடையாளத்திலோ ஆன்மீக அடையாளத்திலோ சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.  பெரும்பாலும் ‘நான்’ எனும் எண்ணம் வரும்போது … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 11

நான் நான் என்றுரைப்பதெல்லாம் ஆராய்கையில்அகமேயன்றி பலவல்ல ஒன்றேயாகும் அகலும் அகந்தை அனேகம் ஆகையால் அனைத்திலும் அகத்தின் பொருள் தொடர்ந்திடும்                         (ஆத்மோபதேச சதகம் – பாடல் 11) நான்காவது பாடலில் சொல்லப்பட்ட தூய அறிவின் சித்திரம் நம் முன்னே உள்ளது.  ஐந்தாவது பாடலில் அத்தூய அறிவு நிலையில் நம்மை பொருத்திப்பார்த்துக்கொள்வது எளிதல்ல என்றார் குரு. அதற்குக் காரணம் உறங்குபவன், விழித்திருப்பவன், வேட்கைகள் உடையவன் அவற்றை வளர்த்தெடுப்பவன் என மீண்டும் மீண்டும் நிகழும் அடையாளப்படுத்தலே என்றார்.  உடலைப் பேணுதல் … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 11

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 10

இருளில் இருப்பவனே யார் நீ? என்றொருவன் கேட்க - நீயும் அவனிடம் ‘நீ யார்? என்கிறாய் இரண்டிற்கும் விடை ஒன்றே!                     (ஆத்மோபதேச சதகம் – பாடல் 10) கண்களை மூடிக்கொண்டு உங்கள் இருப்பை அகத்திலிருந்து நோக்க முயல்வீர்களேயானால் உங்கள் உடலின் எல்லை உண்மையில் எங்கு முடிகிறது  என்பதை அறிவது எளிதல்ல. இங்குமங்குமாக சில மங்கலான உணர்வுகள் தோன்றலாம்.  ஆனால் கண்களை மூடியபடி உங்கள் மண்டையோட்டின் … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 10

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 8

ஒளிமுதலாய பழமைந்தும் உண்டு நாறும் குழலில் புகுந்து மாறிமாறியாடும் கிளிகளைந்தையும் வீழ்த்தி வெளியுருவையேந்தி அகம் விளங்கிடவேண்டும் (ஆத்மோபதேச சதகம் - பாடல் 8) ஆத்மோபதேச சதகத்திற்கு அறிமுகம் போல் அமைந்துள்ள முதல் பத்து பாடல்களில் எட்டாவது மிகவும் முக்கியமானது. இதில், நிமித்தவியல் (teleological) இலக்குடன் ஓர் இருத்தலியல் (ontological) மதிப்பீடு செய்யப்படுகிறது. அழகியலும் அறவியலும் மெய்விளக்கவியலுடன் இணைகின்றன. அத்துடன், நூலின் ஒட்டுமொத்த அமைப்புக்கும் மாதிரியாக விளங்குகிறது இப்பாடல். மனிதன் அடையும் இன்பதுன்பங்களின் ரகசியத்தை விளக்கும் உள உணர்ச்சியின் … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 8

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 7

விழிக்காது உறங்காது அறிவாகவே இருப்பாய்! அவ்வாறிருப்பது கைகூடாதென்றால் ப்ரணவத்தை உணர்ந்து பிறப்பொழிந்து வாழும் முனிஜன சேவையில் உன்னை நிறுத்துவாய்! (ஆத்மோபதேச சதகம் – பாடல் 7) முதல்முறை கேட்கும்போதாவது இப்பாடல் முரணுரையாகத் தோன்றும். விழிப்புநிலைக்கும் உறக்கத்திற்கும் மாறிக்கொண்டேயிருப்பதற்கான தேவையில்லாமல், அறிவுடன் ஒன்றியிரு என்று தேடுபவனை அறிவுறுத்துகிறார் குரு. பெரும்பாலான உயிரினங்களைப் போலவே மனிதனும் பகலில் விழித்திருந்து இரவில் உறங்குகிறான். நமது உறக்கம் மற்றும் விழிப்புப் பழக்கத்திற்க் காரணமான இயற்கையின் தன்னியல்பில் தலையிடும் சக்தி நமக்குள்ளதா? மும்மை அடிப்படைப் … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 7