ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 1

அறிவிலுமேறியறிஞ்ஞிடுன்னவன் தன்னுருவிலுமொத்து புறத்துமுஜ்வலிக்கும் கருவினுகண்ணுகளஞ்சுமுள்ளடக்கி தெருதெரெ வீணு வணங்கியோதிடேணம் [ஆத்மோபதேச சதகம் - பாடல் 1] அறிவினையும் கடந்து  அறிபவனின்அகத்தும் புறத்தும் பேரொளியுடன் ஒளிரும் கருவினை புலனைந்தும் உள்ளடக்கி மீண்டும் மீண்டும் வீழ்ந்து வணங்கியோதிடுவோம் ** ‘அறிவிலுமேறியறிஞ்ஞிடுன்னவன்’ (செயலறிவையும் கடந்து அறிபவன்) என்று தொடங்குகிறது முதல் பாடல்.  செயலறிவு என்பது ஒன்றை சொந்த அனுபவம் மூலமோ நேரடிப் புலனுணர்வு மூலமோ அறிவது.  உங்களது விழிப்புணர்வு ஒரு நனவோடை போல உங்களில் கடந்து செல்வதை கவனியுங்கள்.  உங்களை அறிபவனாக இனம் காணுங்கள்.  உதாரணமாக, … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 1

வேண்டுதல்கள் – 1

மெல்லிய உத்தரவாதம்   இதமானது உன் ஆன்மா நீலநிற ஏரியைப்போலும் அமைதியானது உன் கருணையின் ஆழத்திலிருந்து எழுகின்றன உன் எண்ண அலைகள் மலரும் நாளைக்கான நம்பிக்கை இன்றைய வலிமைக்கான மெல்லிய உத்தரவாதம் உன் மௌனப் புன்னகையின் ரகசியத்தை மட்டும் கற்க வேண்டும் நான்  

கவிதைகள்

இன்று சற்று முந்தி வந்த சூரியன் என் ரோஜாவின் இதழ்களுக்குள் தன் பொற்கதிர்களால் நறுமணத்தை நிரப்பியது நான் உன்னைத் தேடினேன் நீ உறங்கிக் கொண்டிருந்தாய் மாசு மறுவற்ற ஏதோ ஆழத்தில் மூடிய கண்களுடன் ---  வெட்கத்தால் என் தலை கவிழும்படி மனம் மயக்கும் ஒரு புன்னகையே உனது பதில்  ---  ஆனால் படிகம் போல தெளிவாகவும் துல்லியமாகவும் நீயிருக்கும்போது நான் என்ன செய்ய முடியும் – ஒரு புத்தனைப்போல புலன்கள் அணையும் ஆழத்திற்கு மெளனமாக திரும்பிச் செல்வதைத் … Continue reading கவிதைகள்

இந்து மதம் – ஒரு விவேகிக்கான வழிகாட்டி

AN INTELLIGENT MAN’S GUIDE TO THE HINDU RELIGION சொல்புதிது வெளியீடு (தமிழாக்கம் : கெ.பி. வினோத்) 1. அறிமுகம் 2. நமது கோயில்கள் 3. கடவுளரும் வாகனங்களும் 4. கணபதி 5. சரஸ்வதி 6. சுப்ரமணியன் 7. மகாவிஷ்ணு 8. சிவன்