ஞம் ஸர்வோன்மாதினீ அனைவரது களிப்பிலும் மகிழ்ந்திருப்பவளே, அன்னையே! இவ்விழிகள் ஒரு மலரை காண்கையில், அவ் எளிய அனுபவத்தில் பகலவனின் ஓளியும், அழகிய வடிவமைப்பும், மலரிதழ்களின் மனம்மயக்கும் வண்ணமும், அழகை காண்கையில் ஏற்படும் கிளர்ச்சியும் என இவையெல்லாம் பொதிந்துள்ளன. விண்ணும் மண்ணும் அகமும் ஒன்றாகி ஏற்படும் உவகையில் எது அகம் எது புறம் என்று எவரும் எண்ணிப் பார்ப்பதில்லை. எளிய மலரொன்று, மண்ணையும் விண்ணையும் அகத்தின் ரசனையையும் ஒன்றிணைக்க முடியும் என்றால், ஞாயிறும, திங்களும், மினுங்கும் விண்மீன்களும், நிலவுலகக் … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 34
ஶ்ரீசக்ர தியானம்
ஶ்ரீசக்ர தியானம் – 33
ஶம் ஸர்வரஞ்ஜனீ தாயே, ஸர்வரஞ்ஜனீ, எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் உன் வல்லமை எல்லையற்றது. ஒரு பனித்துளிகூட வானவில்லின் ஏழு வண்ணங்களையும் பிரதிபலிக்க முடியும். ஒரு கணம் மாணிக்கமாகவும் மறுகணம் மரகதமெனவும் மாயம் காட்ட முடியும். சில நிமிடங்களில் அது ஆவியாகி மறைந்துவிடும் என்றாலும், இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் நீ புதைந்து வைத்திருக்கும் விந்தைகளை அது காட்டிச் செல்கிறது. உருண்டையான முத்துப்போன்ற சின்னஞ்சிறு உடல்கொண்ட அப்பனித்துளி, தன்னால் முழு வானத்தையும் எதிரொளிக்க முடியவில்லை என்று முறையிடுவதில்லை. எம் … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 33
ஶ்ரீசக்ர தியானம் – 32
ஜம் ஸர்வவஶம்கரீ பகுதிகளை இணைப்பவளே, அன்னையே! விழித்தெழுந்து மேலே பார்க்கையில் மினுங்கும் விண்மீன்களும் ஞாயிறும் திங்களும் திகழும் எல்லையிலா வானப் பரப்பை காண்கிறோம். எம் காலடியில் இந்த நிலன் கால்மணை போலிருக்கிறது. இவை எல்லாம் எப்போது தோன்றின? யாமறியோம். இவையெல்லாம் ஒருநாள் எம்மிடமிருந்து மறைந்துவிடுமோ? அதுவும் யாமறியோம். ஆனால் எமது நனவில் ஒவ்வொரு பகுதியும் ஒரு பெயரைத் தாங்கி, தொடர்புடைய பல கருத்துருவாக்கங்களை எமக்கு நினைவுறுத்தியபடி அறியப்படாத நனவிலி ஆழத்திலிருந்து தோன்றுகிறது. மெய்யெழுத்துக்களும் உயிரெழுத்துக்களும் கொண்டு உருவாக்கப்படும் … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 32
ஶ்ரீசக்ர தியானம் – 31
ச*ம் ஸர்வஜ்ரும்பி*ணீ அன்னையே, ஸர்வதந்த்ரமயீ, ஆன்மாவின் சாரம் புகலடைவதற்கென ஆதி முட்டையின் வாயில் திறக்கப்பட்டபோது படைப்பு தொடங்கிவைக்கப்பட்டது. பிரபஞ்ச இயல்கை ஒன்றினுள் வாழ்வு உயிர்மூச்சென நுழைந்ததைப் போன்றது அது. சிறிது காலத்திற்கு எதுவும் நிகழாதது போலிருந்தது. முட்டை தன் வாயில் மூடி உறக்கத்தில் ஆழ்ந்ததுபோல் தோன்றியது. அதன்பின்னர் அணு சிதைவுற்று அதன் உருவநேர்படிகள் பல்கிப்பெருக, படைப்பெனும் வேதிச் செயல் தொடங்கியது. படைப்புதெய்வத்தின் மூச்சுக் காற்றின் ரகசியமே ஆதிமுட்டைக்குள் நுழைந்தது. உயிரின் புதிய இருப்பிடத்தில் ஒரு விளக்கு ஏற்றப்பட்டதுபோன்ற … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 31
ஶ்ரீசக்ர தியானம் – 30
சம் ஸர்வஸ்தம்பி*ணீ ௐ க்லீம். க்லீம் எனும் மந்திரத்தின் மறைபொருளை பகுத்தறிவுகொண்டு புரிந்துகொள்ள முயலக்கூடாது. உடலுக்கும் ஆன்மாவுக்குமான பரஸ்பர ஊடுருவலைக்கொண்டு அதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நுண்ணிய கரித்துகள் நெருப்பால் நிறையும்போது அது ஒரு தீப்பொறியாகிறது. அப்பொறியின் ஒளிரும் உடலில் துடிக்கும் தீ எது, அசைவிலா கரி எது என்பதை எவரும் பிரித்தறிந்துவிட இயலாது. அதுபோலவே, ஒருவர் முழுமையான இருதுருவநிலையில் (bipolarity) இருக்கையில் பக்தன் யார் இறை எது என்பதை பிரித்தறிய முடியாது. வெயில் முழுவதும் பகலவனுடையது. … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 30
ஶ்ரீசக்ர தியானம் – 29
ஙம் ஸர்வஸம்மோஹினீ படைப்பூக்கத்திற்கெல்லாம் ஊற்றுக்கண்ணாக இருக்கும் அன்னையே! பல சுழற்சிகள் மூலம் பிரபஞ்சம் முழுவதும் நிரம்பியிருக்கும் அழகை நீ பாதுகாத்து வருகிறாய். கடந்துசெல்லும் ஒவ்வொரு கணத்திற்கும் காலம்சார்ந்த பெருமதிப்பொன்று உள்ளது. நேரம் அதன் முழுமையில், தூய காலத் தொடர்ச்சியாக தன்னில் வந்துசென்ற, இனி வரவிருக்கின்ற அனைத்துப் படைப்புச் சுழற்சிகளின் முறிவடையாத ஒருமையை கொண்டுள்ளது. உடல்கொண்ட உயிர்களுக்கென நீ அளித்துள்ள வெளியும் உடல்களுக்கிடையேயான வெளியும், ஓவியர்களுக்கும் சிற்பிகளுக்கும் தமக்கான உலகை தாமே வடிவமைத்துக்கொள்ள வேண்டிய எளிய மனிதர்களுக்கும், உன் … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 29
ஶ்ரீசக்ர தியானம் – 28
க*ம் ஸர்வாஹ்லாதினீ ஒவ்வொருவரிலும் மகிழ்பவளே, அன்னையே! இவ்வுலகைப் படைத்து, காத்து, அழிக்கும் உன் புதிர்ச் செயல்பாடுகள் எல்லாம் அனைவரையும் வியக்க வைக்கின்றன. ஞாயிறு உதிப்பது எங்கே என எவர் கூறிவிட முடியும்? அதோ அங்கிருக்கும் மலைக்குப் பின்னிருந்து உதிப்பதாக ஒருவர் சொல்கிறார். பிறரோ அது கடலிலிருந்து எழுவதாக எண்ணுகின்றனர். காலையில் தொடுவானிலிருந்து தலைநீட்டும் சூரியன் மெல்ல மேற்குநோக்கி நகரும் விந்தையை அனைவரும் காண்கின்றனர். செந்நிறச் சூரியனை பார்த்து மகிழும் சிலர் ‘அதோ பகலவன் எழுகிறான்’ என்கின்றனர். அதே … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 28
ஶ்ரீசக்ர தியானம் – 27
கம் ஸர்வாகர்ஷிணீ அன்னையே, அன்போடு அனைத்தையும் அரவணைப்பவளே! காலையில் சேவற்கோழி கூவுகிறது. மணம் நிரம்பிய தென்றல் மரக்கிளைகளில் கொஞ்சி விளையாடுகையில் இலைகள் சலசலக்கின்றன.. களகளவென்ற அமைதியான பாடலோடு ஒழுகிச் செல்கிறது ஓடை. அன்னையின் முலைப்பாலருந்திய குழவி மகிழ்வோடு சிரிக்கிறது. பல கோயில் கருவறைகளிலிருந்து மணியோசையும் துதிப்பாடல்களும் எழுகின்றன. அவரவர் தம் திறனுக்கேற்றபடி செய்யும் இப்பூசைகளெல்லாம் உனக்கே படைக்கப்படுபவை என்று கருதுகிறேன். நீ எனக்களித்துள்ள குரல் அத்துணை இனிமையானதாக இல்லை. மனம்போன போக்கில் என் கைகளால் தாளமிடுகிறேன். மக்களால் … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 27
ஶ்ரீசக்ர தியானம் – 26
க*ம் ஸர்வவித்ராவிணீ தாயே, அனைத்து திசைகளிலும் கிளைபரப்பி, மணம் நிரம்பிய மலர்கள் செறிந்து நின்றிருந்த விந்தையான மரம் என்ன ஆனது? வாடி, பெருமழையில் வீழ்ந்து மண்ணாகி மறைந்தது அந்த மரமா? அதன் இலைகளும் மலர்களும் என்னவாயின? ஆவியாகி வளிமண்டலத்தில் மறைந்துவிட்டனவா? காலநெருப்பு அம்மரத்தை வெறும் புகையாகவும் சாம்பலாகவும் ஆக்கிவிட்டதா? அதன் இலைகளில் இருந்த பசுமையாற்றல் மேகங்களில் மறைந்து, எப்போதாவது தோன்றும் மின்னலாகிவிட்டதா? படைப்புத் தொடக்கத்தில், பஞ்சபூதங்களின் மூல உயிரணுக்கள் ஐம்மடங்காக்கப்பட்டன. இப்போது அந்திமாலை வேளையில் அவை தம் … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 26
ஶ்ரீசக்ர தியானம் – 25
கம் ஸர்வஸம்க்ஷோபி*ணீ தாயே, நிலைபேறான மெய்மை எனும் வைரக்கற்களால் அலங்கரிக்கப்பட்ட சிவானந்தமெனும் அரியணையில் நீ வீற்றிருக்கிறாய். நீ ஒரு ஆளாக அல்ல, பல்லாயிரம் ஒளிர்வுகளாக காணப்படுகிறாய். சிவனின் பேரொளி எண்ணற்ற கோடி அருமணிகளால் ஆனது. அவை ஒவ்வொன்றிலுமிருந்தும் அளவிடமுடியா பிரகாசத்துடன் எண்ணற்ற கதிர்கள் எழுந்து எல்லா திசைகளிலும் ஒளிவீசுகின்றன. வண்ணமிகு அக்கதிர்களின் திரளால் உன் தூய வடிவு போர்த்தப்பட்டிருப்பதால் அதை காணமுடிவதில்லை. பிரபஞ்சத்தின் அழிவிலும், மீளெழுகையிலும், எல்லா மன்வந்தரங்களிலும் நீ படைப்பவளாகவும் கரைத்தழிப்பவளாகவும் வீற்றிருக்கிறாய். நுட்பங்கள் நிறைந்த … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 25