என் வாழ்க்கைக் குறிப்புகள் – 4

குருகுலம் வெளியிட்டு வந்த இதழில் ‘பாலர் உலகம்’ என்ற ஒரு பகுதியை ஆரம்பித்தேன்.  நேரம் கிடைக்கும்போதெல்லாம் பலவகைப்பட்ட ஊர்களுக்கும் சென்று சிறுவர் குழுக்களை ஒழுங்கமைத்தேன்.  ஒவ்வொரு குழுவைப் பற்றிய அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் குழந்தைகளுடன் தொடர்பை விடாமல் இருந்தேன். 1954 வாக்கில் என்னோடு தொடர்பு வைத்திருந்த சிலர் இன்னும் என்னுடைய நெருங்கிய தோழர்களாக இருக்கிறார்கள்.  அவர்களுடைய வளர்ச்சி, கல்வி, திருமணம், பணி, பிறகு அவர்களின் குழந்தைகள் என்று எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன்.  நான் என்னுடைய குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு … Continue reading என் வாழ்க்கைக் குறிப்புகள் – 4

நடராஜ குருவும் நானும் – 4

நாராயண குருவுக்குப் பின் சிவகிரி மடத்தின் தலைவர் பொறுப்பை ஏற்க இருந்த சுவாமி போதானந்தருக்கு ஆலோசகராக இருக்க வேண்டும் என்பது நடராஜ குருவுக்கு நாராயண குரு இட்ட கடைசி பணிகளில் ஒன்று.  ஆனால், நாராயண குருவின் மகாசமாதிக்குப் பின் மூன்றே நாட்களில் சுவாமி போதானந்தா மறைந்தார்.  அவரது இடத்திற்கு சுவாமி அச்யுதானந்தா வந்தார். இதெல்லாம் நிகழ்ந்தபோது நடராஜ குரு ஐரோப்பாவில் இருந்தார். ஐந்து வருடங்கள் அங்கிருந்த அவர், 1933-இல் வர்க்கலைக்குத் திரும்பினார்.  சிவகிரி உயர்நிலைப்பள்ளியில் அவரது பதவி … Continue reading நடராஜ குருவும் நானும் – 4

என் வாழ்க்கைக் குறிப்புகள் – 3

யதி சென்னை விவேகானந்தா கல்லூரியில்   தத்துவ ஆசிரியராக நியமிக்கப்பட்ட பிறகு  கல்லூரி விடுதியில்  அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள்: விவேகானந்தா கல்லூரி விடுதியின் தலைவராக இருந்த சுவாமி நிஷ்ரேயசானந்தா துணிச்சலான மனநிலையும், உயரிய கொள்கைகளும் உடையவர்.  ஆங்கிலம், சம்ஸ்கிருதம், மலையாளம் மற்றும் ஃபிரெஞ்ச் ஆகிய மொழிகளில் ஆழ்ந்த புலமை உடையவர்.  எல்லோருக்கும் உதவும் அன்பான நண்பர்.  அவருடைய உடலும் மனமும் மிகுந்த ஒழுங்குக்கு உட்பட்டிருந்ததால் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தைக் கற்றுத் தருவதில் அவர் நம்பிக்கைக்குரிய ஆசிரியராக இருந்தார்.   என்னை அறிந்துகொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்த அவர் என்னை … Continue reading என் வாழ்க்கைக் குறிப்புகள் – 3

நடராஜ குருவும் நானும் – 3

கொல்லம் ஶ்ரீ நாராயண கல்லூரி மேலாளர் திரு ஆர். சங்கரிடமிருந்து  எனக்கு ஒரு கடிதம் வந்தது.  அக்கடிதத்தில், உளவியல் துறையில் விரிவுரையாளர் பதவி எனக்கு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. வேலையை நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால் என்னிடம் அணிவதற்கு சட்டையே இருக்கவில்லை.  எனக்கு வேலை கிடைத்த அன்றே குரு வந்தார்.  தன்னிடமிருந்த இரண்டு சட்டைகளை எனக்குக் கொடுத்து பிரச்சினையை தீர்த்து வைத்தார்.  அந்நாட்களில் நான் பருமனாக இருக்கவில்லை.  ஆனால் குரு பருமனாக இருந்தார்.  அவர் குள்ளம், நான் உயரம்.  … Continue reading நடராஜ குருவும் நானும் – 3

என் வாழ்க்கைக் குறிப்புகள் – 2

இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் பிரிட்டிஷ் அரசு தேசியத் தலைவர்களை பரோலில் விடுதலை செய்தது.  சிறையிலிருந்து வெளியே வந்த காந்தி பூனாவிலுள்ள மணிபவனம் என்ற இடத்துக்கு இயற்கை வைத்தியத்துக்காகப் போனார்.  அங்கு அவரை நான் சந்தித்துப் பேசிய அனுபவம் இது. காலை 4 மணிக்கு மணிபவனத்திற்குப் போனேன்.  காலை பிரார்த்தனைக்கு அவர் 5 மணிக்கு அங்கு வருவார் என்று எனக்குத் தெரியும்.  அவருக்கு மிக நெருக்கத்தில் உட்காரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  வழக்கமான 'ஶ்ரீராம் ஜெய்ராம், ஜெய்ராம்'க்குப் பிறகு … Continue reading என் வாழ்க்கைக் குறிப்புகள் – 2

நடராஜ குருவும் நானும் – 2

நடராஜ குரு ஒரு வருடம் ஐரோப்பாவிலும், ஒரு வருடம் அமெரிக்காவிலும் இருந்து விட்டுத் திரும்பிய போது எல்லா இடங்களிலும் அவருக்கு ஒரு ‘ஹீரோ’வைப்போன்ற பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.  மைசூரில் வளர்ந்தவராதலால் அவரால் சரளமாக மலையாளத்தில் பேசமுடியாது.  எனவே,அவரது உரைகளை மலையாளத்தில் மொழிபெயர்ப்பதற்காக அவருடன் நான் செல்ல வேண்டும் என அவர் விரும்பினார்.  மகான்களை தூரத்திலிருந்து மட்டுமே வழிபட முடியும் என்பதை நான் விரைவில் உணர்ந்தேன்.  1946-இல் காந்தியின் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் ஏற்கனவே எனக்கு … Continue reading நடராஜ குருவும் நானும் – 2

என் வாழ்க்கைக் குறிப்புகள் – 1

சாமுவேல் என்ற ஓர் இளம் ஆசிரியர் எங்கள் பள்ளிக் கூடத்தில் இருந்தார்.  அவருக்கு பதினேழு அல்லது பதினெட்டு வயதுதான் இருக்கும்.  ஆரம்பத்திலிருந்தே எனக்கு அவரை மிகவும் பிடித்துப் போயிற்று.  அவர் எப்போதும் மிக வேகமாக நடப்பார்.  மழையோ வெயிலோ இல்லாமலிருந்தாலும் அவர் தன்னுடைய குடையை விரித்துப் பிடித்தபடிதான் நடப்பார்.  நடக்கும்போது அவர் ஒரு கையை விறுவிறுப்பாக வீசி நடப்பது காதுக்குக் கேட்காத ஒரு தாளகதிக்கு ஏற்ப நடப்பதைப்போல இருக்கும்.  சில மாலைவேளைகளில் என்னைக் கைப்பிடித்து மெதுவாக என் … Continue reading என் வாழ்க்கைக் குறிப்புகள் – 1

நடராஜ குருவும் நானும் – 1

நடராஜ குருவைப் பற்றி எண்ணும்போதெல்லாம், 1938-இல் ஊட்டி ஃபெர்ன்ஹில் குருகுலத்தில் குருவை நான் முதலில் சந்தித்தது நினைவுக்கு வருகிறது. அவர் ஏகாந்தமாய் இருந்தார். காலை ப்ரார்த்தனைக்குப் பின்னர் என்னையும் என்னை அழைத்துச் சென்றிருந்த நண்பரையும் மதிய உணவுக்கு அழைத்திருந்தார். மிகவும் எளிய உணவு. பின்னர், வெங்காயத்தோல் தாளில் அச்சிடப்பட்டிருந்த நாராயண குருகுலம் பற்றிய கையேட்டை எனக்களித்தார். அப்போது குருகுலத்தில் ஒரு வகுப்பை நடத்தி வந்தார் அவர். பத்து ரூபாய் மாதக் கட்டணம். தங்குவதற்கும் உணவுக்குமான கட்டணம் எதுவும் … Continue reading நடராஜ குருவும் நானும் – 1