ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 24

அவனிவனென்னறியுந்நதொக்கெயோர்த்தா லவனியிலாதிமமாயொராத்மரூபம்; அவனவனாத்மசுகத்தினாசரிக்கு ந்நவயபரன்னு சுகத்தினாய் வரேணம்                                          (ஆத்மோபதேச சதகம் - பாடல் 24) அவன் இவன் என அறிபவையெல்லாம் அவனியில் ஒற்றை ஆதி வடிவாம் அவனவன் தன் நலனுக்காற்றுவதெல்லாம் அயலவன் நலனும் உவப்பின் உயர்வாம் நம்மைச் சுற்றிலும் நம்மைப் போன்றே உள்ள மாந்தரை பார்க்கிறோம். மானுடரின் சில … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 24

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 23

அபரனுவேண்டியஹர்ன்னிசம் ப்ரயத்னம் க்ருபணதவிட்டு க்ருபாலு செய்திடுந்நு க்ருபணனதோமுகன்னாய்க்கிடந்நு செய்யு ந்நபஜயகர்ம்மமவன்னுவேண்டி மாத்ரம்                                       (ஆத்மோபதேச சதகம் - பாடல் 23) பிறனுக்காக பகலிரவும் வினைபுரிபவன் தன்னலம்துறந்த அருளாளன் தனக்கென மட்டும் பயனற்றதை செய்பவன் தன்னலத்தில் அமிழ்பவன் ஒருவர் தன் வாழ்வை நோக்குகையில், அதில் கட்டமைப்பு சார்ந்த சில வரம்புகள் இருப்பதை பார்க்கிறார். … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 23

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 22

ப்ரியமபரன்றெயதென் ப்ரியம்; ஸ்வகீய ப்ரியமபரப்ரியமிப்காரமாகும் நயமதினாலெ நரன்னு நன்ம நல்கும் க்ரியயபரப்ரியஹேதுவாய் வரேணம் (ஆத்மோபதேச சதகம் : பாடல் 22) பிறன்நலம் என்நலமாகும் தன்நலம் பிறன்நலமாகும் தன்நலம் பயக்கும் செயலெல்லாம் பிறன்நலம் கருதல் வேண்டும் ஒரு புழுவானாலும் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் யோகியானாலும் ஒரு ஜீவராசியின் வாழ்வை கவனித்தால் அதன் அனைத்துச் செயல்களும் இன்ப வேட்கையால் தூண்டப்படுபவையே என்பது தெரியும். தூண்டல்கள் தன்னுணர்வுடனும் தோன்றலாம், நனவிலி நிலையிலும் தோன்றலாம். இங்கு அமர்ந்திருக்கையில் நிலைமாறி அமர்வதுகூட இன்னும் வசதியுடன் இருப்பதற்காகத்தான். … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 22

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 21

ப்ரியமொரு ஜாதியிதென்ப்ரியம் த்வதீய ப்ரியமபர ப்ரியமென்னநேகமாயி ப்ரியவிஷயம் ப்ரதி வன்னிடும் ப்ரமம்; தன் ப்ரியமபர ப்ரியமென்னறிஞ்ஞிடேணம் (ஆத்மோபதேச சதகம் – பாடல் 21) ஒன்றென இருக்கும் விருப்பை  எனதென உனதென பிறனதென பிரிக்கையில் வருவது குழப்பம் தன்விருப்பே பிறன் விருப்பும்  அனுபவம் என்பது அக அனுபவம் புற அனுபவம் என்று இருவகைப்படும். புற உலகில் நாம் பொருட்களுடனும், மக்களுடனும், பல்வேறு வகையான நிகழ்வுகளுடனும் இடைவினையாற்றுகிறோம். அகத்தில் எண்ணங்களை ஓம்புகிறோம்; நினைவுகளை மீட்டெடுக்கிறோம்; சில புலனனுபவங்களை பெறுகிறோம். இவ்வெல்லா … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 21

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 20

உலகினு வேறொரு ஸத்தயில்லதுண்டெ ன்னுலகருரப்பது ஸர்வமூஹஹீனம்; ஜளனு விலேசயமென்னு தோன்னியாலும் நலமியலும் மலர்மால நாகமாமோ? (ஆத்மோபதேச சதகம் – பாடல் 20) இவ்வுலகன்றி பிறிதொரு மெய்மையில்லை உண்டென்று உலகோர் உரைப்பது சிந்தனையின்மையால் பாம்பென்று மூடனுக்கு தோன்றினாலும் நன்மலர்மாலை நாகமாகுமோ? சில நேரங்களில் நாம் வாழும் இவ்வுலகு இருண்டதாகத் தோன்றுகிறது. இதை துறந்து எங்காவது ஓடிவிடவேண்டுமென்று நினைக்கிறோம். அனைத்தும் எங்ஙனம் இருக்கவேண்டுமோ அப்படியே இருக்கக்கூடிய பிறிதொரு உலகு இருக்கிறது என்று எண்ணுகிறோம். “பாழாய்ப் போன இவ்வுலகை விட்டு ஆன்மீகம் … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 20

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 19

அடிமுடியற்றமதுண்டிதுண்டதுண்டெ ன்னடியிடுமாதிமஸத்தயுள்ளதெல்லாம் ஜடமிது ஸர்வமநித்யமாம்; ஜலத்தின் வடிவினெ விட்டு தரங்கமன்யமாமோ?                                                           (ஆத்மோபதேச சதகம் – பாடல் 19) அடி, முடி, அற்றம், அது உண்மை, இது உண்மை, அல்ல அது என்று வாதிடுவர்; முழுமுதல் மெய்யொன்றே … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 19

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 18

அஹமிருளல்லிருளாகிலந்தராய் நா மஹமஹமென்னறியாதிருன்னிடேணம் அறிவதினாலஹமந்தகாரமல்லெ ன்னறிவதினிங்கனெயார்க்குமோதிடேணம்                                                               (ஆத்மோபதேச சதகம் – பாடல் 18) அகமென்பது இருளல்ல இருளென்றால் நாம் குருடராய் நான் நான் என்பதுமறியாமல் இருந்திடுவோம் அறிவதனால் அகம் இருளில் இல்லை அறிந்த இதனை … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 18

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 17

அழலெழுமஞ்சிதளார்ன்னு ரண்டு தட்டாய் சுழலுமனாதிவிளக்கு தூக்கியாத்மா நிழலுருவாயெரியுன்னு நெய்யதோ முன் பழகிய வாஸன வர்த்தி வ்ருத்தியத்ரே                             (ஆத்மோபதேச சதகம் – பாடல் 17) ஐந்திதழ்களாய் இரண்டடுக்கில் எரியும் ஆதியில்லா சுழல்விளக்கென அகம் நிழலுருவாய் எரிய நெய்யாவதோ அனுபவங்கள் திரிகளாய் எண்ணமாற்றங்கள். தனியனின் அகம் குறித்த சித்திரம் ஒன்று இங்கு தீட்டப்படுகிறது. பொதுவாக பிரபஞ்சத்திற்கு அது பொருந்தக்கூடியதே. ஆக, இப்பாடலை பிரபஞ்ச அடிப்படையிலும் புரிந்து கொள்ளலாம்; உளவியல் ரீதியாகவும் பொருள் கொள்ளலாம். ஒளியும் இருளும் முழு மெய்மையின் … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 17

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 16

அதிகவிஷால மரு ப்ரதேஷமொன்னாய் நதி பெருகுந்நதுபோலெ வன்னு நாதம் சுருதிகளில் வீணு துரக்குமக்ஷியென்னும் யதமியலும் யதிவர்யனாயிடேணம் அகன்று விரிந்த பெரும் பாலையில் ஆற்று வெள்ளம் போலே வரும் ஒலி செவி நிறைக்க கண்கள் திறக்கும் எதுவும் பாதிக்காத உன்னத யதியாகவேண்டும்                                                     … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 16

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 15

பரயுடெ பாலுநுகர்ன்ன பாக்யவான்மார்க் கொரு பதினாயிரமாண்டொரல்பநேரம் அறிவபரப்ரக்ருதிக்கதீனமாயா லரநொடியாயிரமாண்டுபோலெ தோன்னும் பரத்தின் பால் நுகர்ந்த பேறுபெற்றோருக்கு பதினாயிரமாண்டென்பது ஒரு கணமே அபரஉலகுக்கு அறிவு அடிமையானாலோ அரை நொடியும் ஆயிரமாண்டாக தோன்றுமே                             (ஆத்மோபதேச சதகம் – பாடல் 15) சிலர் எப்போதுமே ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.  அவர்களுக்கு அழுவதற்கு ஒரு காரணம் வேண்டும்.  அவர்களைச் சுற்றி எப்போதுமே இருள்தான்.  ஆயினும் அவர்களை நாம் கெட்டவர்கள் என்று சொல்லமுடியாது.  அவர்களது மனம் மிகவும் நுட்பமானது (tender), பிறரது … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 15