சௌந்தர்யலஹரீ – 12

த்வதீயம் ஸௌந்தர்யம் துஹினகிரிகன்யே துலயிதும் கவீந்த்ரா: கல்பந்தே கத*மபி விரிஞ்சிப்ரப்*ருதய: யதாலோகௌத்ஸுக்யாதமரலலனா யாந்தி மனஸா தபோபி*ர்துஷ்ப்ராபாமபி கிரிஶஸாயுஜ்யபதவீம் பாடல் - 12 பனிபடர்ந்த இமையவன் மகளே, உமையே, இணையிலா உன் எழிலை  பிரம்மனும் பிருஹஸ்பதியும் போன்ற மாகவிகளாலும் பாடிவிட இயலாது பிரம்மனும் பிறரும் தம் படைப்புகளில் உன் அழகை கொண்டுவர கடும் முயற்சி செய்கின்றனர் உன் இணை இறையான சிவன் மட்டுமே காணக்கூடிய உன் எழிலை கண்டுவிட வேண்டுமென்ற ஒற்றை விழைவுடன் சிவனுடன் இணைவதற்கு கடுந்தவம் புரிகின்றனர் … Continue reading சௌந்தர்யலஹரீ – 12

சௌந்தர்யலஹரீ – 11

சதுர்பி*: ஶ்ரீகண்டை*: ஶிவயுவதிபி*: பஞ்சபி*ரபி ப்ரபி*ன்னாபி*: ஶம்போ*ர்னவபி*ரபி மூலப்ரக்ருதிபி*: சதுஶ்சத்வாரிம்ஶத்வஸுதலகலாஶ்ராத்ரிவலய த்ரிரேகா*பி*: ஸார்த*ம் தவ ஶரணகோணா: பரிணதா: பாடல் - 11 நான்கு சிவசக்ரங்களும் ஐந்து சக்திசக்ரங்களும் (மைய பிந்துவான ஶம்பு தவிர்த்து) ஒன்பது ஆதி இயற்கையாகவும் மூன்று வட்டங்களுக்குள் அமைந்த எட்டு இதழ்கள் கொண்ட ஒரு தாமரையும் பதினாறு இதழ்கள் கொண்ட ஒரு தாமரையும் படிநிலைகளெனவும் ஆறு கோடுகளுடன் இந்நாற்பத்திமூன்றும் சேர்ந்து உன் இல்லமென்றாகின்றன.  ** முந்தைய பாடல்களில் தனி உயிரியின் பிண்ட அடித்தளம் (microcosmic … Continue reading சௌந்தர்யலஹரீ – 11

சௌந்தர்யலஹரீ – 10

ஸுதா*தா*ராஸாரைஶ்சரணயுகலாந்தர்விகலிதை: ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்னாயமஹஸ: அவாப்ய ஸ்வாம் பூ*மிம் பு*ஜகனிப*மத்*யுஷ்டவலயம் ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி பாடல் - 10 அன்னையே உடலில் நீ குண்டலினீயாக இருக்கிறாய் நாடிகளின் அடித்தளத்தில் நாக வடிவில் ஒரு மண்டலத்தை உருவாக்கி  அதை உன் இல்லமெனக் கொண்டு அந்தக் குழிவில் உறங்குகிறாய் உன் கால்விரல் நுனிகளிலிருந்து சொட்டும்  அழிவின்மையெனும் அமுதமே  உன்னை நீராட்டும் ஆனந்தம் பிரபஞ்சத்தை வளமூட்டும் முப்புரப்பேரழகி நீயே ** இந்தப் பாடலில் குண்டலினீ, நாடிகள் மற்றும் … Continue reading சௌந்தர்யலஹரீ – 10

சௌந்தர்யலஹரீ – 9

மஹீம் மூலாதா*ரே கமபி மணிபூரே ஹுதவஹம் ஸ்தி*தம் ஸ்வாதி*ஷ்டா*னே ஹ்ருதி மருதமாகாஷமுபரி மனோஅபி ப்*ரூமத்*யே ஸகலமபி பி*த்வா குலபத*ம் ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே பாடல் - 9 மூலாதாரத்தில் நிலத்தையும், மணிபூரகத்தில் நீரையும் ஸ்வாதிஷ்டானத்தில் நெருப்பையும், இருதயத்தில் காற்றையும் மேலே விண்வெளியையும் புருவமத்தியில் வைக்கப்பட்ட மனதையும் ஊடுருவி ஆயிரமிதழ்த் தாமரையில் உன்னிறையுடனான ஆடலை நிகழ்த்துகிறாய் ** முந்தைய பாடலில் தனியரின் ஆன்மாவுக்கும் பிரபஞ்ச ஆன்மாவுக்குமான உறவு பொதுமையம் கொண்ட ஏழு வட்டங்களால் ஆன … Continue reading சௌந்தர்யலஹரீ – 9

சௌந்தர்யலஹரீ – 8

ஸுதா*ஸிந்தோ*ர்மத்*யே ஸுரவிடபிவாடீபரிவ்ருதே மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமணிக்ருஹே ஶிவாகாரே மஞ்சே பரமஶிவபர்யங்கநிலயாம் ப*ஜந்தி த்வாம் த*ன்யா: கதிசன சிதானந்தலஹரீம் பாடல் - 8 எல்லையிலா அமுதக்கடல் நடுவே  முத்துத் தீவில் அமைந்த  கடம்ப மரச் சோலையில் கற்பக மரங்கள் சூழ எழுப்பப்பட்ட நனவெனும் அருமணி இல்லத்தில்  சிவ உருவிலான சேக்கையில் இடப்பட்ட  பரமசிவன் எனும் மெத்தைமேல்   அமர்ந்திருப்பவளான உன்னை  மீஆன்மாவின் பேரானந்தமென எண்ணி  ஊழ்கத்தில் ஆழ்கின்றனர் அரிய நிறைவாழ்வு பெற்ற சிலர். ** ஏழு வட்டங்களாலான ஒரு மண்டலத்தை … Continue reading சௌந்தர்யலஹரீ – 8

சௌந்தர்யலஹரீ – 7

க்வணத்காஞ்சீதாமா கரிகலப*கும்ப*ஸ்தனனதா பரிக்ஷீணா மத்*யே பரிணதஶரச்சந்த்ர வதனா த*னுர்பாணான் பாஶம் ஸ்ருணிமபி ததா*னா கரதலை: புரஸ்தாதாஸ்தாம் ந: புரமதி*துராஹோபுருஷிகா பாடல் - 7 புரமெரித்தவனின் தன்முனைப்பே வடிவானவள் கரிமத்தகம் ஒத்த முலைகளோடு முன் ஒசிந்து மெல்லிய இடையும் முழுநிலவொத்த முகமும் கொண்டு வில்லும், அம்பும், கயிறும், கொக்கியும் ஏந்தி எம் முன் எழுந்தருளட்டும் ** பருண்மை, நுண்மை, அறிவெல்லை கடந்த நிலை என்ற மூன்று பண்புகளும் கொண்ட கடவுளாக அன்னையானவள் வணங்கப்படுகிறாள். இந்தப் பாடல் அவளது பருண்மை … Continue reading சௌந்தர்யலஹரீ – 7

சௌந்தர்யலஹரீ – 6

த*னு: பௌஷ்பம் மது*கரமயீ பஞ்ச விஶிகா* வஸந்த: ஸாமந்தோ மலயமருதாயோத*னரத*: ததா*ப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபா மபாங்கத் தே லப்த்*வா ஜகதிதமங்கோ விஜயதே பாடல் - 6 மலையவன் மகளே  உன் ஓரவிழிப் பார்வையால் அருள்பெற்று  வண்டுகளால் ஆன நாண் கொண்ட மலர்வில்லும்,  ஐம்மலர் அம்பும் ஏந்தி வசந்தகாலத்தை அமைச்செனக் கொண்டு  மலையிலிருந்து தவழும் தென்றலெனும் தேரில் வெற்றியோடு அமர்ந்திருக்கிறான் உடலிலியான மன்மதன் ** கைலாயத்தில் சிவன் ஊழ்கத்தில் ஆழ்ந்திருந்தான். உயிரினங்களின் சந்ததி பெருக வேண்டும் … Continue reading சௌந்தர்யலஹரீ – 6

சௌந்தர்யலஹரீ – 5

ஹரிஸ்த்வாமாரத்*ய ப்ரணதஜனஸௌபா*க்யஜனனீம் புரா நாரீ பூ*த்வா புரரிபுமபி க்ஷோப*மனயத் ஸ்மரோ அபி த்வாம் நத்வா ரதிநயனலேஹ்யேன வபுஷா முனீனாமப்யந்த: ப்ரப*வதி ஹி மோஹாய மஹதாம பாடல் - 5 அடியார்க்கருளும் உன் அருள் பெற்ற அரி அழகியின் வடிவு கொண்டான் முப்புரம் எரித்த அரன் மனதில்  மோக அலையை எழுப்பினான் மன்மதனோ உன் அடி வணங்கி தன் இணை ரதி மகிழும் வடிவு கொண்டான் உன் அருளால் முனிவர் மனதிலும் மோகம் எழச்செய்யும்  கலை கைவரப்பெற்றான். ** … Continue reading சௌந்தர்யலஹரீ – 5

சௌந்தர்யலஹரீ – 4

த்வதன்ய: பாணிப்*யாமப*யவரதோ தைவதகண: த்வமேகா நைவாஸி ப்ரகடிதவராபீ*த்யபி*னயா ப*யாத் த்ராதும் தாதும் ப*லமபி ச வாஞ்சாஸமதி*கம் ஶரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ பாடல் - 4 அனைத்துலகுகளுக்கும் அடைக்கலம் தரும் அன்னையே! அஞ்சலும் அருளலும் காட்டி நிற்கின்றன தெய்வங்கள் எல்லாம் நீயோ எந்த சைகையும் காட்டுவதில்லை உன்னடியார் விழைவதற்கும் மேலானவற்றை உன்னடிகளே வழங்கிவிடுகின்றன. ** விஷ்ணு, சிவன் போன்ற பெரும்பாலான கடவுளர் சிலைகள் வலதுகரம் தூக்கி அருள் வழங்கும் சைகையும், இடதுகரம் விரித்து அடைக்கலம் … Continue reading சௌந்தர்யலஹரீ – 4

சௌந்தர்யலஹரீ – 3

அவித்யானாமந்தஸ்திமிரமிஹிரத்வீபநகரீ ஜடானாம் சைதன்யஸ்தபகமகரந்தஸ்ருதிஜரீ தரித்ராணாம் சிந்தாமணிகுணனிகா ஜன்மஜலதௌ* நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபுவராஹஸ்ய ப*வதீ  பாடல் - 3 உனது இணையடித் துகள் அறியாமையில் மூழ்கியோருக்கு இருளகற்றும் ஒளிர்தீவாகவும் அசைவற்றிருப்போர்க்கு நனவெனும் மலரின் மகரந்த ஒழுக்காகவும் ஏழ்மையிலிருப்போர்க்கு விரும்பியதையளிக்கும் அருமணியாகவும் பிறவிப்பெருங்கடலில் மூழ்கியோர்க்கு அழிவிலிருந்து உலகைக்காத்த வராகத்தின் கொம்பாகவும் இருக்கிறது. ** “அர்ஜுனா, துயருற்றோர், அறிவுத்தேட்டம் கொண்டோர், வாழ்வின் நன்மைகளை நாடுவோர், விவேகிகள் என்ற நான்கு வகை மக்கள் என்னை உளம்கொள்கின்றனர்” - இது பகவத்கீதையில் கிருஷ்ணன் சொல்வது. … Continue reading சௌந்தர்யலஹரீ – 3