சௌந்தர்யலஹரீ – 22

ப*வானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம் இதி ஸ்தோதும் வாஞ்சன் கத*யதி ப*வானி த்வமிதி ய: ததைவ த்வம் தஸ்மை திஶஸி நிஜஸாயுஜ்யபதவீம் முகுந்தப்ரஹ்மேந்த்ரஸ்பு*டமகுடநீராஜிதபதாம் பாடல் - 22 பவானீ,  இந்த அடிமைக்கு அருட்பார்வை ஒன்றை அருள்வாயாக! அரி அரன் அயன் மூவரும்  தீபம் கொண்டு உன்னை ஆராதித்து உனக்கு தலைவணங்கும்போது  அவர்களது மகுடத்தின் ஒளி உன் பாதங்களை ஒளிரச் செய்கிறது.  உன்னை போற்ற விழைவோர்  ‘தேவி, நீ’ என்று சொல்லத் தொடங்கிய உடன் … Continue reading சௌந்தர்யலஹரீ – 22

சௌந்தர்யலஹரீ – 21

தடில்லேகா*தன்வீம் தபனஶஶிவைஶ்வாநரமயீம் நிஷண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலானாம் தவ கலாம் மஹாபத்மாடவ்யாம் ம்ருதிதமலமாயேன மனஸா மஹாந்த: பஶ்யந்தோ தத*திபரமாஹ்லாதலஹரீம் பாடல் - 21 பேரன்னையே,  ஆறு தாமரைகளுக்கு மேலே அமைந்த எண்ணற்ற இதழ்கள்கொண்ட தாமரையில் அமர்ந்திருப்பவளே சூரியன், சந்திரன், அக்னி இவர்களின்  மின்னலொளி போன்றது உனது ஒளிர்வு பிந்து, நாதம், கலை என்பவை அடங்கிய உன் இறைவனோடு நீ கலந்திருக்கும்  தோற்றத்தை மெய்யும் மெய்யற்றதும் கலந்ததான மாயையிலிருந்து  விடுபட்ட யோகியர்  காண்கையில் பேரானந்த அலையில் மூழ்குகின்றனர் ** மனிதரில் … Continue reading சௌந்தர்யலஹரீ – 21

சௌந்தர்யலஹரீ – 20

கிரந்தீமங்கேப்*ய: கிரணநிகுரும்பாம்ருதரஸம் ஹ்ருதி த்வாமாத*த்தே ஹிமகரஶிலாமூர்திமிவ ய: ஸ ஸர்பாணாம் தர்பம் ஶமயதி ஶகுந்தாதி*ப இவ ஜ்வரப்லுஷ்டான் த்ருஷ்ட்யா ஸுக*யதி ஸுதா*தா*ரஸிரயா பாடல் - 20 உன் உடலுமிழும் கதிர்களை  படிகத்தின் குளிரொளியென தியானிப்பவர் அமுதம் போன்ற அக ஆற்றல் பெறுகின்றார் அரவையும் அடக்கக்கூடிய  அவர்களின் அருட்பார்வை  காய்ச்சல் கண்டவரையும் காப்பாற்றுகிறது. ** உணர்வுருவும் பருவுருவும், ஒன்று மற்றொன்றால் அறியப்படும் அளவுக்கு ஒருமை கொண்டவை. சிவ-சக்தி இணைவும் அதே போன்றது. உணர்வுருவின் தன்னொளி  பருவுருவால் எதிரொளிக்கப்பட்டு அனைத்துத் … Continue reading சௌந்தர்யலஹரீ – 20

சௌந்தர்யலஹரீ – 19

முக*ம் பிந்தும் க்ருத்வா குசயுகமத*ஸ்தஸ்ய தததோ* ஹரார்த*ம் த்*யாயேத் யோ ஹரமஹிஷி தே மன்மத*கலாம் ஸ ஸத்ய: ஸம்க்ஷோப*ம் நயதி வனிதா இத்யதிலகு* த்ரிலோகீமப்யாஶு ப்*ரமயதி ரவீந்துஸ்தனயுகாம் பாடல் - 19 அரனருகமைந்தவளே தன் பிந்துவில் உன் முகத்தையும் கீழுள்ள, சூரியசந்திரர்கள்  போன்ற முலைகளையும் அதற்கும் கீழுள்ள முக்கோணத்தையும் காமத்தை உண்டாக்கும் உன் இயங்காற்றலின் மந்திரத்தோடு (க்லீம்) தியானிப்பவன் மூவுலகைப் படைக்கும் படைப்பாளினி உள்ளிட்ட  பெண்களில் சந்ததிபெருக்கும் ஆற்றலை தூண்டுகிறான் ** இங்கு-இப்போது என்ற இயல் உலகில்(factual … Continue reading சௌந்தர்யலஹரீ – 19

சௌந்தர்யலஹரீ – 18

தனுச்சா*யாபி*ஸ்தே தருணதரணிஶ்ரீஸரணிபி*ர் திவம் ஸர்வாமுர்வீமருணிமனிமக்னாம் ஸ்மரதி ய: ப*வந்த்யஸ்ய  த்ரஸ்யத்வனஹரிணஶாலீனநயனா: ஸஹோர்வஶ்யா வஶ்யா: கதி கதி ந கீர்வாணகணிகா: பாடல் - 18 ஒளிரும் உன் தளிருடலின் அழகு நிறைக்கும் விண்ணையும் பகலவன் ஒளியில் செந்நிறமாக ஒளிரும் மண்ணையும் தியானிப்பவர் கானகத்தில் உறையும் மான்களின் மருளும் விழிகொண்ட மாதரையும்  ஊர்வசி முதலிய அரம்பையர் பலரையும் ஈர்ப்பதன் விந்தைதான் என்ன! ** ஞாயிறும் திங்களும் பூமியை அரவணப்பது விண்ணும் மண்ணும் ஒன்றாக இணைவதாக பார்க்கப்படுகிறது. பூமி துவக்கம், சூரியன் … Continue reading சௌந்தர்யலஹரீ – 18

சௌந்தர்யலஹரீ – 17

ஸவித்ரீபி*ர்வாசாம் ஶஶிமணிஶிலாப*ங்கருசிபி*ர் வஶின்யாத்யாபி*ஸ்த்வாம் ஸஹ ஜனனி ஸஞ்சிந்தயதி ய: ஸ கர்தா காவ்யானாம் ப*வதி மஹதாம் ப*ங்கிருசிபி*ர் வசோபி*ர்வாக்தேவீவதனகமலாமோதமது*ரை: பாடல் - 17 அன்னையே,  படிகம்போல் ஒளிரும் வஶினீ முதலிய இறைவியரோடும் சொற்களை உருவாக்கும் ஸாவித்ரீயரோடும் சேர்த்து உன்னை தியானிப்பவர்கள்  மாகவிகளின் படைப்புகளால் தூண்டல் பெற்றதுபோன்ற நூல்களை யாக்கிறார்கள்.  அவர்களது சொற்கள் சொல்லின் இறைவியாம் சரஸ்வதியின் எழில்முகத்தின் மணத்தால் நிரம்பியிருக்கின்றன ** மௌனம் என்பது தனிமையின் இயல்பு. பேச்சு தோழமையின் இயல்பு. “பிறர்” என்பதோடு தொடர்புறுத்திக் கொள்ளவேண்டி … Continue reading சௌந்தர்யலஹரீ – 17

சௌந்தர்யலஹரீ – 16

கவீந்த்ராணாம் சேத: கமலவனபாலாதபருசிம் ப*ஜந்தே யே ஸந்த: கதிசிதருணாமேவ ப*வதீம் விரிஞ்சிப்ரேயஸ்யாஸ்தருணதரஶ்ருங்காரலஹரீ கபீ*ராபி*ர்வாக்பி*ர்விதத*தி ஸதாம் ரஞ்ஜனமமீம் பாடல் - 16 அன்னையே உன்னை செந்நிறமெனவே அழைக்கின்றனர் ஞானியர் பொய்கையில் தாமரைக்கூட்டமெனத் திகழும் பெருங்கவிஞரின் இதயங்களை எழுகதிரின் ஒளியென உன் பேரெழில் மகிழ்விக்கிறது பிரம்மனின் இணையான சரஸ்வதியின் இனிமையும் பெருமையும் கொண்ட  இசைநிறை காதல்சொற்களைக் கேட்கும்  நல்லூழ் கொண்டவர்கள் அவர்கள். சீரழகுக் கவிதைகளை அவர்கள் இயற்றுகையில் கவிதைச்சுவை அறிந்தோர் மகிழ்ந்து போற்றுகின்றனர் ** சுயத்தில் தோன்றும் ஒரு சலனத்துடன் … Continue reading சௌந்தர்யலஹரீ – 16

சௌந்தர்யலஹரீ – 15

ஶரஜ்ஜ்யோத்ஸ்னாஶுப்*ராம் ஶஶியுதஜடாஜூடமகுடாம் வரத்ராஸத்ராணஸ்ப*டிகக*டிகாபுஸ்தககராம் ஸக்ருன்ன த்வா நத்வா கத*மிவ ஸதாம் ஸம்னிதத*தே மது*க்ஷீரத்ராக்ஷாமது*ரிமாது*ரீணா ப*ணிதய: பாடல் - 15 கூதிர்ப்பருவ நிலவின் ஒளி கொண்டவளே பிறைநிலவை முடிமேல் சூடியவளே உன் கரங்கள் அருளலும் அஞ்சலும் காட்டுகின்றன ஒரு கையில் படிகமாலையும் இன்னொன்றில் சுவடியும் ஏந்தியிருக்கிறாய் உன் முன் வந்து வணங்கும் நல்லோர் தேனினும் பாலினும் தேறலினும் இனிய  உன் சொற்களை தவறவிடுவரோ ** மனிதகுலம் ஆன்மாவின் உள்ளுறையும் நனவிலிக்கும் (அறிவெல்லை) கடந்த மீநனவுக்கும் இடையில் வாழ்கிறது. நனவும் … Continue reading சௌந்தர்யலஹரீ – 15

சௌந்தர்யலஹரீ – 14

க்ஷிதௌ ஷட்பஞ்சாஶத்விஸமதி*கபஞ்சாஶதுதகே ஹுதாஶே த்வாஷஷ்டிஶ்சதுரதி*கபஞ்சாஶதனிலே திவி த்வி:ஷட்த்ரிம்ஶன்மனஸி ச சது:ஷஷ்டிரிதி யே மயூகா*ஸ்தேஷாமப்யுபரி தவ பாதாம்புஜயுகம் பாடல் 14 நிலத்தில் (மூலாதாரம்) ஐம்பத்தாறு, நீரில் (மணிபூரகம்) ஐம்பத்திரண்டு தீயில் (ஸ்வாதிஷ்டானம்) அறுபத்திரண்டு, காற்றில் (அநாஹதம்)                                                                                   ஐம்பத்திநான்கு வெளியில் (விஶுத்தி) எழுபத்திரண்டு, மனதில் (ஆஞா) அறுபத்திநான்கு இக்கதிர்களுக்கு மேலே உள்ளன உன் தாமரை இணையடிகள் ** பிரம்மனால் படைக்கப்பட்டு, விஷ்ணுவால் காக்கப்பட்டு, சிவனால் சாம்பலாக ஆக்கப்படும் இயல் உலகு பேரன்னையின் காலடியில் இருந்து எடுக்கப்பட்ட துகள்களால் ஆனது. இப்பாடலில், … Continue reading சௌந்தர்யலஹரீ – 14

ஸௌந்தர்யலஹரீ – 13

நரம் வர்ஷீயாம்ஸம் நயனவிரஸம் நர்மஸு ஜட*ம் தவாபாங்காலோகே பதிதமனுதா*வந்தி ஶதஶ: கலத்வேணீபந்தா*: குசகலஶவிஸ்ரஸ்தஸிசயா ஹடா*த் த்ருட்*யத்காஞ்ச்யோ விகலிததுகூலா யுவதய: பாடல் - 13 அருள்நிறை அன்னையே,  உன் அருட்பார்வை ஒருவன் மீது பட்டுவிட்டால் அவன் கிழவனென்றாலும், முரடனென்றாலும் கலவியின்பம் தூண்டத்தெரியாதவன் என்றாலும் நூற்றுக்கணக்கான கன்னியர்  கிளர்ச்சிகொண்டு அவன்பின் செல்கின்றனர் மோகத்தில் நாணம் துறக்கின்றனர் கூந்தல் அவிழ்ந்து கலைவதை கொழுமுலைமேலிருந்து ஆடை நழுவுவதை அரைக்கச்சவிழ்ந்து வீழ்வதை அவர்கள் உணர்வதுமில்லை ** பன்னிரண்டாவது பாடலை முழுமை செய்யும் பாடல் இது. … Continue reading ஸௌந்தர்யலஹரீ – 13