சௌந்தர்யலஹரீ – 32

ஶிவ: ஶக்தி: காம: க்ஷிதிரத* ரவி: ஶீதகிரண: ஸ்மரோ ஹம்ஸ: ஶக்ரஸ்ததனு ச பராமாரஹரய: அமீ ஹ்ருல்லேகா*பி*ஸ்திஸ்ருபி* ரவஸானேஷு க*டிதா ப*ஜந்தே வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம் பாடல் - 32 அன்னையே, ஶிவ, ஶக்தி, காம, க்ஷிதி என்ற நான்கும் அதன்பின் ரவி, ஶீதகிரண, ஸ்மர, ஹம்ஸ, ஶக்ர என்பவையும் அவற்றைத் தொடர்ந்து பர, மாரஹர என்பவையும் ஹ்ரீம் எனும் மந்திரத்தோடு முடிவடைகையில் உன் பெயரின் எழுத்துக்கூறுகளாகின்றன. ** எல்லா உசாவல்களும், நினைவூட்டல்களும், மதிப்பீடுகளும், செயல்தீர்மானங்களும், … Continue reading சௌந்தர்யலஹரீ – 32

சௌந்தர்யலஹரீ – 31

சது:ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகலமதிஸந்தா*ய பு*வனம் ஸ்தி*தஸ்தத்தத்ஸித்தி*ப்ரஸவபரதந்த்ரை: பஶுபதி: புனஸ்த்வன்னிர்பந்தா*தகி*லபுருஷார்தை*கக*டனா ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதலமவாதீதரதிதம் பாடல் - 31 பஶுபதி எனப்படும் உயிர்களின் இறைவன் ஒவ்வொன்றும் தனக்கேயான வெளிப்படையான இயக்கத்தை உற்பத்தி செய்யக்கூடிய அறுபத்திநான்கு தந்த்ரங்கள் கொண்டு முழு உலகையும் இயங்கும்படி ஆணையிட்டு தான் அசையாது அமைந்தான்.  நீ வற்புறுத்தியதால் அனைத்து தந்த்ரங்களுக்குமான ஒருமித்த குறிக்கோளை எய்தக்கூடிய உனது தந்த்ரத்தை  இவ்வுலகுக்குக் கொணர்ந்தான்.   ** அடிப்படையில் மானுடனும் ஒரு விலங்கே. மற்றெல்லா விலங்குகளைப் போலவே, அவனும் செயல்களில் … Continue reading சௌந்தர்யலஹரீ – 31

சௌந்தர்யலஹரீ – 30

ஸ்வதேஹோத்பூ*தாபி*ர்க்*ருணிபி*ரணிமாத்யாபி*ரபி*த: நிஷேவ்யே நித்யே த்வாமஹமிதி ஸதா பா*வயதி ய: கிமாஶ்சர்யம் தஸ்ய த்ரிநயனஸம்ருத்தி*ம் த்ருணயதோ மஹாஸம்வர்தாக்னிர்விரசயதி நீராஜனவிதி*ம் பாடல் - 30 தன்னுடலில் தோன்றும் கட்புலனாகா அணிமா போன்ற  அக ஆற்றல்களையே பரிவாரங்களெனக்கொண்டவளே நிலைபேறான உன்னை ‘நீயே நான்’ என எப்போதும் தியானிப்பவர் முக்கண்ணனின் நன்மைகளையே பொருட்டெனக் கொள்வதில்லை அத்தைகையோருக்கு  ஊழி நெருப்பே ஒளியூட்டாகிறது ** நசிகேதஸின் தந்தை சினம் கொண்டு, மகனை காலனிடம் அளித்துவிடுவதாக மிரட்டினான். அந்த மிரட்டல் இளையவனான நசிகேதஸின் ஆர்வத்தை தூண்டியது. தப்பியோடுவதற்கு … Continue reading சௌந்தர்யலஹரீ – 30

சௌந்தர்யலஹரீ – 29

கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடப*பி*த: கடோ*ரே கோடீரே ஸ்க*லஸி ஜஹி ஜம்பா*ரிமகுடம் ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப*முபயாதஸ்ய ப*வனம் ப*வஸ்யாப்*யுத்தா*னே தவ பரிஜனோக்திர்விஜயதே பாடல் - 29 மூவர் உன் முன் வணங்கி நிற்கின்றனர் இல்லம் திரும்பும் உன் இறையை எதிர்கொள்ள திடுமென நீ எழுகையில் உன் பரிவார கணத்தோர் இங்ஙனம் இசைக்கின்றனர் பிரம்மன் மணிமுடியை மீட்டளிப்பாயாக விஷ்ணுவின் அணிமுடி உன்முன் உள்ளது (தவறுதலாக நீ அதை தட்டிவிடக்கூடும்) இந்திரனின் மகுடத்தை காப்பாற்றுவாயாக ** நேற்று நிகழ்ந்தது உறங்கிவிட்டது. … Continue reading சௌந்தர்யலஹரீ – 29

சௌந்தர்யலஹரீ – 28

ஸுதா*மப்யாஸ்வாத்ய ப்ரதிப*யஜராம்ருத்யுஹரிணீம் விபத்யந்தே விஶ்வே விதி*ஶதமகா*த்யா திவிஷத: கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனா ந ஶம்போ*ஸ்தன்மூலம் தவ ஜனனி தாடங்கமஹிமா பாடல் - 28 பிரம்மனும் இந்திரனும் இறையோர் பிறரும் அழிவின்மையளிக்கும் அமிழ்தருந்தியபோதும் அனைத்துலகோரும் அடைவது மரணம் ஆலகாலம் எனும் கொடுநஞ்சை அருந்திய  அரனுக்கோ அழிவென்பதே இல்லை அன்னையே இது சொல்கிறது தாடங்கம் எனும் உன் காதணியின் பெருமையை ** காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நொடியும் காலம் வருகிறது, இருக்கிறது, போய்க்கொண்டே இருக்கிறது. அது … Continue reading சௌந்தர்யலஹரீ – 28

சௌந்தர்யலஹரீ – 27

ஜபோ ஜல்ப: ஶில்பம் ஸகலமபி முத்ராவிரசனா கதி: ப்ராதக்ஷிண்யக்ரமணமஶனாத்யாஹுதிவிதி*: ப்ரணாம: ஸம்வேஶ: ஸுக*மகி*லமாத்மார்பணத்ருஶா ஸபர்யாபர்யாயஸ்தவ ப*வது யன்மே விலஸிதம் பாடல் - 27 என் பிதற்றல்கள் உன் போற்றுதல்களாகட்டும் என் செய்கைகள் உன்னை வழிபடும் சடங்குச் சைகைகளாகட்டும் என் இயக்கம் உன்னை வலம் வருவதாகட்டும் என் உணவு உன் வேள்விப் படையலாகட்டும் நான் படுப்பது உன்னை வீழ்ந்து வணங்குவதாகட்டும் நான் துய்ப்பதெல்லாம் என்னில் இருப்பவையெல்லாம் உனக்குப் படையல்களாகட்டும் ** காகம் கரைகிறது, பூனை மியாவ் என்கிறது, நாய் … Continue reading சௌந்தர்யலஹரீ – 27

சௌந்தர்யலஹரீ – 26

விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம் விநாஶம் கீநாஶோ ப்*ஜதி த*னதோ யாதி நித*னம் விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித த்ருஶா மஹாஸம்ஹாரே ‘ஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ பாடல் - 26 பிரம்மன் மீண்டும் பஞ்சபூதங்கள் என்றாகிறான் விஷ்ணு தன் ஆர்வத்தை ஒழிகிறான் முற்றிலும் அழிப்பவன் மரணத்தை தியானிக்கிறான் செல்வத்தின் இறை மறைகிறான் இந்திரனோ மனுக்களுடன் சேர்ந்து அரைக்கண் மூடிக் கிடக்கிறான் அரனை அகலாதவளே அறுதி அழிவெனும் அந்நேரத்தில் உன் இறைவன் மட்டும் தன் ஆடலில் … Continue reading சௌந்தர்யலஹரீ – 26

சௌந்தர்யலஹரீ – 25

த்ரயாணாம் தேவானாம் த்ரிகுணஜனிதானாம் தவ ஶிவே ப*வேத் பூஜா பூஜா தவ சரணயோர்யா விரசிதா ததா* ஹி த்வத்பாதோத்வஹனமணிபீட*ஸ்ய நிகடே ஸ்தி*தா ஹ்யேதே ஶஶ்வன்முகுலிதகரோத்தம்ஸமகுடா: பாடல் - 25 அரன் துணைவியே உனது முக்குணங்களை உண்டாக்கும் கடவுளர் மூவரும் உன் இணையடி அமைந்த  அருமணி பதித்த கால்மணையருகே அகலாது நின்றபடி தம் தலைமேல்  மலர்மொக்கெனக் குவித்த கரங்களோடு உன் திருவடி தொழுவதே தொழுகை ** 25 முதல் 27 வரையிலான மூன்று பாடல்களையும் ஒரு அலகாகக் கொள்ள … Continue reading சௌந்தர்யலஹரீ – 25

சௌந்தர்யலஹரீ – 24

ஜகத் ஸூதே தா*தா ஹரிரவதி ருத்ர: க்ஷபயதே திரஸ்குர்வன்னேதத் ஸ்வமபி  வபுரீஶஸ்திரயதி ஸதாபூர்வ: ஸர்வம் ததிதமனுக்ருஹ்ணாதி ச ஶிவ ஸ்தவாஞாமாலம்ப்ய க்ஷணசலிதயோர்ப்*ரூலதிகயோ: பாடல் - 24 தாயே, பிரம்மன் உலகை படைக்கிறான் விஷ்ணு காக்கிறான் ருத்ரன் அழிக்கிறான் அனைத்தையும் தன் உடலில் ஈர்த்து தன்னையே மறைத்துக்கொள்கிறான் நிலைபேற்றைக் குறிக்கும் சதா என்பதை தன் பெயரின் முன்னொட்டாகக் கொண்ட சிவன் மெல்லிய கொடிபோன்ற உன் புருவத்தின் நுண்ணசைவில் உன் கட்டளை அறிந்து முழு உலகுக்கும் அருள்புரிகிறான் ** தொடுவானில் … Continue reading சௌந்தர்யலஹரீ – 24

சௌந்தர்யலஹரீ – 23

த்வயா ஹ்ருத்வா வாமம் வபுரபரித்ருப்தேன மனஸா ஶரீரார்த*ம் ஶம்போ*ரபரமபி ஶங்கே ஹ்ருதமபூ*த் யதேதத் தவத்ரூபம் ஸகலமருணாப*ம் த்ரிநயனம் குசாப்*யாமானம்ரம் குடிலஶஶிசூடாலமகுடம் பாடல் - 23 அன்னையே சிவனின் இடபாகத்தை கைக்கொண்டும் நிறைவடையாமல் அவனது இன்னொரு பாகத்தையும் எடுத்துக்கொண்டுவிட்டாய் போலும் அதனால்தான் முக்கண்களும், முலைகளின் கனத்தால் சற்றே முன்சரிந்த உடலும், பிறைநிலவு சூடிய குழலும் கொண்ட உனதுருவம் ஒண்சிவப்பாய் ஒளிர்கிறது போலும் ** முழுமுதலும் முக்குணங்களும் இசைவோடு இணைதலே யோகம் எனப்படுவது. ப்ராணாயாமத்தில், ப்ராணனும் அபானனும் ஒன்றாகி வியானன், … Continue reading சௌந்தர்யலஹரீ – 23