இந்துமதம் – 5. சரஸ்வதி

சரஸ்வதி கணபதிக்குப் பின் சரஸ்வதி தேவி வருகிறார்.  குருவைத் தொடர்ந்து ஞானம் வருவது இயல்பானதே.  அனைவராலும் சரஸ்வதி ஞானத்தின் கடவுளாக வணங்கப்படுகிறார்.  இந்து மதத்தில் சரஸ்வதி என்ற இறை உருவகத்தின் தோற்றம் குறித்த காலவரிசைச் சித்திரம் மிகவும் ஆர்வமூட்டுவது.  அவர் ஒரு வேதகால தேவதை அல்ல.  இந்திய இறைத் தொகையில் சரஸ்வதி இதிகாச காலகட்டத்தில்தான் அறிமுகப்படுத்தப்படுகிறார்.  இக்காலகட்டம் இந்துமத இயக்கத்தில் ஒரு மாபெரும் மாற்றம் மற்றும் மறுமதிப்பீடு நிகழ்ந்த காலமாகும்.  அதன் வழிபாட்டுச் சடங்குகள், குறிப்பாக உயிர்பலி … Continue reading இந்துமதம் – 5. சரஸ்வதி

இந்துமதம் – 4. கணபதி

கணபதிஎப்பொழுதும் கணபதி முதன்மையானவர்.   என்றும், முதல் வணக்கம் அவருக்கே செல்லும்.  எந்த சுபகாரியத்தையும், கணபதிக்குப் படையலுடன் ஆரம்பிப்பது மரபு.  கணபதி அல்லது கணேசன் “கணங்களின் (உபசரிப்பவர்களின்) அதிபன்” எனக் கருதப்படுகிறார்.  ஒளிரும் கணங்கள் (தேவ கணங்கள்) மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் (பித்ருக்கள்) என கணங்கள் இருவகைப்படுகின்றன.  தேவகணங்கள் ஏற்றப்பாதையையும், பிதிர்கணங்கள் கீழ்நோக்கிய இறக்கப்பாதையையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.  ஏற்றப்பாதை புலனறிவுகளுக்கு அப்பாற்பட்ட தூய அறிவுக்கு இட்டுச்செல்லும்.  கீழ்நோக்கிய பாதை செயல் சரடுகளால் நம்மை  நடப்பு நிலைகளுடன் பிணைக்கிறது.   இவை இரண்டுக்கும் அதிபனான கணபதி, நமக்குத் தடைகளையும் விடுதலையும் அருள்வதாகக் கொள்ளலாம்.சொல்பிறப்பியல் (Etymology) ஆய்வுகளின்படி … Continue reading இந்துமதம் – 4. கணபதி

இந்துமதம் – 3. கடவுளரும் வாகனங்களும்

இந்துக் கடவுள்களும் அவர்தம் வாகனங்களும் உடலும் சுயமும் கோயில்கள் குறியீட்டு வடிவில், புறவயமாக நமது இருப்பைச் சுட்டுகின்றன. கோயிலில் நுழைந்து சன்னிதியை அணுகி ஒருமுகமாக தியானிக்கும் ஒருவர், அக்கணம் சுயம் விலகி தமது இருப்பை உணர்கிறார்.   ஆய்வுக்கூடங்களில் நாம் பெற முயற்சிக்கும் அறிவு, சார்புத்தன்மையுடையது.  இதை “சுழன்று அறியும் அறிவு” என ஹென்றி பெர்க்ஸன் (Henri Bergson) குறிப்பிடுகிறார்.   ஆனால் தூய அறிவென்பது ஒன்றன் இருப்பை அணுகி, அதனைத் தமது சொந்த அனுபவமாக ஆக்கிக் கொள்வதாகும்.  ஆகவே, … Continue reading இந்துமதம் – 3. கடவுளரும் வாகனங்களும்

இந்துமதம் – 2. நமது கோயில்கள்

வெளியுலக வாழ்வில் மதச்சடங்குகள், ஆசாரங்கள் போன்றவற்றை ஏற்பவர்களையும் நிராகரிப்பவர்களையும் நாம் அன்றாடம் காணமுடிகிறது.  ஆனால், நம் அனைவரின் வாழ்வும் குறைந்தபட்ச ஆன்மீகப் பாதையில்தான் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது என்ற உண்மை பெரும்பாலும் நம் கவனத்திற்கு வருவதில்லை.   ஒருவரின் வெளி நடத்தையைக்கொண்டு அவர் நம்பிக்கையைத் தீர்மானிப்பது மிகவும் மேலோட்டமான போக்கு.   அனைத்து நிறுவன மதங்களையும், இறையியல் கோட்பாடுகளையும் ஒருங்கே நிராகரிக்கும் ஒருவர் அவரது உள்ளத்தில் பேருவகைகளின் ஊற்றை உணரும் தருணங்கள் அமையலாம்.  அது அவரது ஆளுமையின் உருவாக்கத்தில்,  நடத்தையில் சீரிய ஒழுக்கத்தை மறு தொகுப்பு செய்துகொள்வதின் ஆதாரப்புள்ளியாகிறது.  … Continue reading இந்துமதம் – 2. நமது கோயில்கள்

இந்து மதம் – ஒரு விவேகிக்கான வழிகாட்டி – 1. அறிமுகம்

இந்துமதம் எனும் சொல்லை நாம் காணும் மதப் பின்புலமுள்ள எண்ணற்ற நிகழ்வுகளைத் தொகுக்கும் ஒரு பொதுச் சொல்லாகக் கருதலாம்.   வெவ்வேறு படிநிலைகளில் மத நம்பிக்கை கொண்டு வாழும் மக்கள் இந்துக்களில் உள்ளனர். தீவிர உலகியல்வாதிகளான சார்வாகர்கள் முதல் துாய கருத்துமுதல்வாதிகளான (idealists) அத்வைத வேதாந்திகள் வரை அனைவருக்கும்  இந்து மதம்  எனும் பெருங்குடும்பம் இடமளிக்கிறது. அவர்களுக்குள்ளும்  ஒரு குறிப்பிட்ட கடவுளை நம்புபவர்கள், அந்த நம்பிக்கையற்றவர்கள் என இரு தரப்பினரைக் காணலாம்.    அனைவரும் ஒரே கடவுளில் நம்பிக்கை வைக்கவேண்டும் … Continue reading இந்து மதம் – ஒரு விவேகிக்கான வழிகாட்டி – 1. அறிமுகம்