ஶ்ரீசக்ர தியானம் – 39

ணம் ஸர்வஸித்தி*ப்ரதா இவ்வுலகின் பேரன்னையே! எமது உலகு எத்தனையோ ஆயிரமாண்டுகளாக கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்த ஒரு தீப்பந்தென இருந்திருக்க வேண்டும் என அறிகிறோம். எமது சகோதரக் கோள்கள் கூட, சூரிய விபத்திற்குப் (solar catastrophe) பிறகு அதேபோல் இருந்திருக்கக் கூடும். சூல்மேகங்கள் உருவாகி நீர்பொழிந்து ஒவ்வொன்றையும் குளிர்வித்து தற்போதைய நிலையை எய்த, சூரியனின் இந்தக் கங்குகள் எத்தனை ஆயிரமாண்டுகள் பொறுத்திருந்திருக்க வேண்டும்! இவ்வுலகை குளிரச் செய்தது மட்டுமன்றி இதில் உயிரினங்களும் தோன்றி வாழும்படி செய்திருக்கிறாய். இயற்கை கலையை நகலெடுப்பதாகத் தோன்றுகிறது! … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 39

சௌந்தர்யலஹரீ – 39

தவ ஸ்வாதி*ஷ்டா*னே ஹுதவஹமதி*ஷ்டா*ய நிரதம் தமீடே ஸம்வர்தம் ஜனனி மஹதீம் தாம் ச ஸமயாம் யதாலோகே லோகான் தஹதி மஹதி க்ரோத*கலிதே தயார்த்ரா யாத்ருஷ்டி: ஶிஶிரமுபசாரம் ரசயதி பாடல் - 39 அன்னையே வேள்வி நெருப்பை உன் ஸ்வாதிஷ்டானத்தில் வைத்து உன்னை போற்றுகிறேன் எப்போதும் அதை பேரழிவைக்கொணரும் தீயாகவே காண்கிறேன் அவனது பெருஞ்சினம் உலகுகளை எரிக்கையில் உன் கருணை கண்பார்வை வழியே உலகம் இளவேனிலின் தண்மைகொள்ளட்டும் என அங்கே ஸமயத்தையும் வைக்கிறேன். ** அவிழ்க்க முடியாத புதிரென … Continue reading சௌந்தர்யலஹரீ – 39

ஶ்ரீசக்ர தியானம் – 38

ட*ம் ஸர்வத்வந்த்வக்ஷயங்கரீ முழுமையை இசைவிக்கும் அன்னையே, தாமரை மலரின் மகரந்தத்தை உண்டு, அதன் தேனைப் பருகி, அதன் இதழ்களுக்குள்ளேயே வசிக்கும் வண்டுடன் ஞானியை ஒப்பிடுவதுண்டு. நீயும் உன் இறையும் உமது இணைவுக்கென ஆயிரமிதழ்த் தாமரையை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். சேற்றில் மலர்ந்தாலும், படைப்புகளிலேயே அதி தூயதாய் கொண்டாடப்படுவது செந்தாமரை. அதேபோல், மாசும், அறியாமையும், துயரும் நிரம்பிய இவ்வுலகில், நனவெனும் விண்ணக ஏரியில் திளைக்கும் சிவ-சக்தியைப் போல, ஞானம் ஒரு பெரும் விந்தையென மலர்கிறது.  கடந்தநிலையிலான சஹஸ்ராரத்திலிருந்து எண்ணங்களும் கவிதைகளும் நிரம்பிய … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 38

சௌந்தர்யலஹரீ – 38

ஸமுன்மீலத்ஸம்வித்கமலமகரந்தைகரஸிகம் ப*ஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மானஸசரம் யதாலாபாதஷ்டாதஶகுணிதவித்*யாபரிணதிர் யதாதத்தே தோஷாத் குணமகி*லமப்*த்ய: பய இவ பாடல் - 38 மானஸ ஏரியில் வாழும் பேரான்மாக்களின் நனவில் மலரும் அறிவெனும் தாமரைகளின் தேனை அருந்தி மகிழும்  அவ்விரு அன்னங்களை தியானிக்கிறேன் நீரிலிருந்தெடுத்த பால்போன்ற தீயதிலிருந்து பிரித்தெடுத்த நன்மை நிரம்பிய பதினெட்டு கலைகளும் அவற்றின் உரையாடலிலிருந்து முகிழ்த்தவையே ** எங்கும் பரந்த முடிவிலியில், இங்கு-இப்போது என்ற இரண்டும் நுழைத்து வைக்கப்பட்டுள்ளன. சிறியனவாகிய, கட்புலனுறுப்பாகிய நமது கண்கள் மூளையில் உள்ள … Continue reading சௌந்தர்யலஹரீ – 38

ஶ்ரீசக்ர தியானம் – 37

டம் ஸர்வமந்த்ரமயீ ஞானத்தின் அன்னையே, இப்போது, இங்கிருந்தபடி அங்கே, அனைத்தையும் அரவணைத்திருப்பதை நாங்கள் காண்கிறோம். எல்லையிலா தெளிந்த வானை உன்னுடன் ஒப்பிடத்தோன்றுகிறது. நாங்கள் இருக்கவும் இயங்கவும் தேவையான வெளி அதில்தான் அருளப்பட்டிருக்கிறது. வானும் அதன் வெறுமையும் அனைத்தையும் ஒளிரச்செய்யும் ஒளியையும், தூயதாய் இருக்கையில் ஒளியின் ஊடுருவும் தன்மையையும் எண்ண வைக்கின்றன. தூய ஒளிர்வையும் (illumination) தூய ஒளிவின்மையையும் (transparency) கருதும்போதெல்லாம் சூரியனின் தூய ஒளியே எங்கள் எண்ணத்தில் இயல்பாக எழுகிறது. இதனால், அறிவு ஒளியுடனும் அறியாமை இருளுடனும் … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 37

சௌந்தர்யலஹரீ – 37

விஶுத்தௌ* தே ஶுத்த*ஸ்ப*டிகவிஶதம் வ்யோமஜனகம் ஶிவம் ஸேவே தேவீமபி ஶிவஸமானவ்யவஸிதாம் யயோ: காந்த்யா யாந்த்யா ஶஶிகிரணஸாரூப்யஸரணேர விதூ*தாந்தர்த்*வாந்தா விலஸதி சகோரீவ ஜகதீ பாடல் - 37 உனது விஶுத்தி சக்ரத்தில்  படிகம் போன்ற தூயவனும் ஆகாயத்தை தோற்றுவிப்பவனுமான சிவனையும்  அவனுக்கிணையான சக்தியையும்  துதிக்கிறேன் இந்த இணையரிடமிருந்து பெருகி ஒழுகும் அழகிய நிலவொளியில் திளைக்கும் உலகு அக இருள் அகன்ற சகோரப் பறவை போலிருக்கிறது ** பூமியைப் பொறுத்தவரை சூரியன் கடுமையான பணி ஏவுநன். நாள் முழுவதும் அவளது … Continue reading சௌந்தர்யலஹரீ – 37

ஶ்ரீசக்ர தியானம் – 36

ட*ம் ஸர்வஸம்பத்திபூரனீ அருள்நிறை அன்னையே, மெய்யறிவரும் மெய்யியலாளரும் படைப்பு குறித்து சிந்தித்து மூன்று தரிசனங்களை அடைந்துள்ளனர். அவர்களில் சிலர் இறை என்பதை, பிரபஞ்சத் தந்தையெனக் காண்கின்றனர். அவன், பல்வகை உயிரினங்களைக் கொண்ட உலகுகளைத் தோற்றுவிக்க எண்ணி ஆழ்படிம உருமாதிரி எனும் கருத்தை உண்டாக்கி அதனை இயற்கையின் பிரபஞ்சக் கருப்பையில் செலுத்தியவன். அதிலிருந்து பல்வகை உயிரினங்கள் தோன்றின; ஒவ்வொன்றும் ஒரு இனத்தைச் சேர்ந்தவையாக அமைந்தன; அவை தம் இனத்தை பெருக்கின. மாறிக்கொண்டே இருக்கும் காரண-காரியச் செயல்பாடு வழியே அவை … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 36

சௌந்தர்யலஹரீ – 36

தவாஞாசக்ரஸ்த*ம் தபனஶஶிகோடித்*யுதித*ரம் பரம் ஶம்பு*ம் வந்தே பரிமிலிதபார்ஶ்வம்  பரசிதா யமாராத்*யன் ப*க்த்யா ரவிஶஶிஶுசீனாமவிஷயே நிராதங்கே லோகே நிவஸதி ஹி பா*லோகபு*வனே பாடல் - 36 அன்னையே, கோடி சூரியசந்திரர்கள்போல் ஒளிரும்  உன் ஆஞா சக்ரத்தில் முழுமுதலாய் அமைந்திருக்கும் ஶம்புவை வணங்குகிறேன் அவனது இரு புறங்களும்  மீநனவால் ஒளியூட்டப்படுகின்றன சூரியனும் சந்திரனும் அக்னியும்  தீண்டமுடியாத இடத்தில் இருப்பதை புரிதலுக்கப்பாற்பட்டதை தனித்திருப்பதை வழிபடுபவர் தூய அக உலகில் வாழ்கிறார் ** மானுடனின் வயிறெனும் குழியுள் உறையும் நெருப்புக்கு எரிபொருள் தேவைப்படுகிறது. … Continue reading சௌந்தர்யலஹரீ – 36

ஶ்ரீசக்ர தியானம் – 35

டம் ஸர்வார்த*ஸாத*னீ அன்னையே, நோக்கங்களை மெய்ப்படச் செய்பவளே, நீ அமைந்த மையப்புள்ளியை (பிந்துஸ்தானம்) தியானிக்கையில், நான் என் புருவமத்தியில் உள்ள ஆஞாவில் நிலைகொள்கிறேன். அங்கிருந்து மனம் விசாரணைகளாக குமிழ்ப்பதாக சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து எண்ண ஓடைகள் எழுகின்றன. இயல்பிலேயே நீ இசைத் துடிப்புகளாக (நாதரூபிணி) இருக்கின்றாய். அப்பாலிருக்கும் விண்வெளியிலிருந்து (பராகாஶம்) நீ தோன்றுகிறாய் என்று சொல்லப்பட்டாலும், அண்டம் முழுதும் நீ பரவிக் கடந்து செல்கிறாய். ஒவ்வொரு மூலக்கூறிலிருந்தும் கலைநயமிக்க படைப்புகளை உருவாக்குகிறாய். அவற்றிலுள்ள போற்றுதற்குரிய பேரழகு வெளிப்படும்படி, … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 35

சௌந்தர்யலஹரீ – 35

மனஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதி*ரஸி த்வமாபஸ்த்வம் பூ*மிஸ்த்வயி பரிணதாயாம் ந ஹி பரம் த்வமேவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விஶ்வவபுஷா சிதானந்தாகாரம் ஶிவயுவதி பா*வேன பிப்*ருஷே பாடல் - 35 ஆஞாவில் மனமாக, விஶுத்தியில் வெளியாக அநாஹதத்தில் வளியாக ஸ்வாதிஷ்டானத்தில் காற்றின் சாரதியாக மணிபூரகத்தில் நீராக இருக்கிறாய் உன் தோற்றம் எனும் வடிவன்றி வேறொன்றும் இல்லை உனது சுயத்திலிருந்து தோற்றம் கொள்வதற்கென இந்தப் பிரபஞ்ச வடிவு கொண்ட நீ பேரின்ப நனவெனும் வடிவு கொண்ட நீ சிவனை … Continue reading சௌந்தர்யலஹரீ – 35