ஶ்ரீசக்ர தியானம் – 47

பம் ஸர்வாங்கஸுந்தரீ நிலையழியச் செய்யும் அழகன்னையே, சூரியன் உலகின் கண் எனப்படுகிறது. கண் ஆன்மாவின் சூரியன் எனப்படுகிறது. உன் படைப்புகளிலெல்லாம், காண்பவருக்கும் காணப்படுவதற்கும் இடையில், அகத்திற்கும் புறத்திற்கும் இடையில் எதிரிடையான இருதுருவத் தன்மையை வைத்திருக்கிறாய். பார்க்கப்படும் பொருளில் கண்ணுக்குப் புலனாகும் புள்ளிகள் அனைத்தையும் நோக்கி எய்யப்படும் அம்பைப் போலவே நோக்கும் செயலில் கவனம் எனும் அம்பு கண்களில் இருந்து எய்யப்படுகிறது. வில்லாளனின் கவனமே அவன் எய்யும் அம்பின் துல்லியத்தை குறிக்கிறது. தற்காத்துக் கொள்ளலில் வில்லும் அம்பும் அவசியமானவை. … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 47

ஶ்ரீசக்ர தியானம் – 46

ப*ம் ஸர்வவிக்*னநிவாரிணீ எங்கும் நிறை அன்னையே, சிவனையும் சக்தியையும் விரும்புவோர் தம் இதயத்தில் நாடுவது உன்னையே. உடல்கள் பல என்றாலும், அனைத்திலும் சிவன் உறைகிறான். உயிர்கொண்ட அனைத்து ஜீவராசிகளும் தம் கைகால்களை அசைக்கவும் சுவாசிக்கவும் தேவையான ஆற்றலில் நீ திகழ்கிறாய். பிறைநிலவைச் சூடியதால் உன் இறைவன் கலாதரன் எனப்படுகிறான். நிலத்தில் அமர்ந்த சிவனின் சடைமுடி பிறைநிலவால் அலங்கரிக்கப்பட்டுள்ளது ஒரு புதிர்தான். அவன் முழுவதும் அவனல்லன், நீயும் அவனில் திகழ்கிறாய். உனது நெற்றியே பிறைநிலவைப்போல் ஒளிவீசுகிறது. இறையுருவை முழுமைபெறச் … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 46

ஶ்ரீசக்ர தியானம் – 45

பம் ஸர்வம்ருத்யுப்ரஶமனீ அழகிற்சிறந்த அன்னையே! ஞானியர் உன் இறைவனை மெய்யென்றும், பேரின்ப அமைதி என்றும், அழகென்றும் (சத்யம், சிவம், சுந்தரம்) வர்ணிக்கின்றனர். உன்னை அவனிடமிருந்து பிரிக்கவியலாது என்பதால்தான் அவனது பரிமாணத்தின் உச்சமாக அழகு சேர்க்கப்பட்டுள்ளதோ? மெய்யியலாளர், நம்பகத்தன்மை கூடிய உண்மையை தேடிக்கொண்டே இருக்கின்றனர். ஊழ்கத்தில் அமைவோர் பேரானந்தத்தில் கரைந்துபோகும்படி தம்மை ஒழுங்கமைத்துக் கொள்கின்றனர். ஆனாலும், அழகின் தரிசனம் தரும் இன்பத்தை இவ்வுலகில் உள்ள எதுவும் அளிப்பதில்லை. பேரானந்தமும் மெய்மையும் அழகில் உறைகின்றன என்பதுதானே இதன் பொருள்?   ஒன்று … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 45

ஶ்ரீசக்ர தியானம் – 44

னம் ஸர்வது:க*விமோசனீ எமக்கு உறுதிப்பாடளிப்பதில் மகிழும் அன்னையே! முழுமுதல் என்பது புதிர்களாலும் முரண்களாலும் நிரம்பியிருப்பதாகத் தோன்றுகிறது. நீயும் உன் இறைவனும் உனது லாஸ்ய நாட்டியத்தையும் அவனது அழிவாடலான தாண்டவ நடனத்தையும் ஆடுவதற்கென இங்கு-இப்போது எனும் ஒளிவட்டம் பாய்ச்சப்படும் எல்லையிலா கால-இடத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உனது படைப்பின் விரிவு எல்லையற்றது; எமது பார்வையோ குறுகியது. தொடுவானத்தின் எல்லைக்கப்பால், நீலவான் கூரை மறைத்திருக்கும் எதையும் எம்மால் காண முடிவதில்லை.  நிகழ்காலம் என்பது ஒருபோதும் கண்ணிமைப்பை விட நீண்டதல்ல. கடந்துசெல்லும் ஒவ்வொரு கணமும் … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 44

ஶ்ரீசக்ர தியானம் – 43

த*ம் ஸர்வகாமப்ரதா ஆடலில் திளைக்கும் அன்னையே, உன் லீலையில் நீ மகிழ்கிறாய். இருளை இத்துணை ஈர்ப்புடையதாக நீ ஏன் படைத்துள்ளாய் என்பதை யாமறியோம். இரவின் இருள்திரையில் உலகு மூடப்படுகையில் மினுங்கும் மீன்களைக் கொணர்ந்து இருளின் மாறுபாட்டை மேலும் கவர்ச்சிகரமானதாக்குகிறாய். எம்மை நீ உறங்கவைக்கையில், பகலின் பெருமையை, குருமார்களின் காலடியில் அமர்ந்து நாங்கள் தேடும் ஞானத்தின் மெய்மையை மறந்துபோகிறோம். எங்கும் நிறைந்திருக்கும் உனது கரிய புரிகுழல்கள் எம்மை மேலும் மேலும் ஆழுறக்க நிலைக்கு கொண்டுசெல்கின்றன. அப்போது கனவுகளில் திளைப்பது … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 43

ஶ்ரீசக்ர தியானம் – 42

தம் ஸர்வமங்கலகாரிணீ நன்மையை அருள்பவளே, அன்னையே! உனது கட்டளைப்படி ஒன்று பலவாகி, ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான ஒரு இயக்கம் விதிக்கப்படுகிறது. ஆதித்யன் எனப் பெயர் கொண்ட சூரியன் ஒருவனே. என்றபோதும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெயரால் அவன் அழைக்கப்படுகிறான். அவன் கொணரும் நன்மை ஒவ்வொரு மாதமும் வேறுபடுகிறது. மேஷம் உலகில் நிகழ்பவை அனைத்தையும் தொடங்கி வைக்கிறது. ஞாயிறு அதன் தொடக்கத்தில் விஸ்வகர்மன் எனும் உலகச் சிற்பியாக எண்ணப்படுகிறான். அனைத்து திசைகளையும் நோக்கும் ரவி படைப்புச் செயலுக்கென படிநிலைகளிலான ஒரு … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 42

ஶ்ரீசக்ர தியானம் – 41

த*ம் ஸர்வப்ரியங்கரீ கருணைவடிவானவளே, அன்னையே, உனது செல்வம் எங்கும் நிறைந்துள்ளது. மூன்றரைச் சுருள்கள் கொண்ட நாகமென மூலாதாரத்தில் ஒளிந்துள்ளவளாக நீ வர்ணிக்கப்படுகிறாய். முதுகெலும்பின் நுனியிலிருந்து தலைப்பகுதியிலுள்ள ஆயிரமிதழ்த் தாமரை வரை செல்லும் செங்குத்து அளபுருவில் (vertical parameter)  இடா, பிங்கலை, சுஷும்னம் என்ற மூன்று ஆற்றல்பாதைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இருதயத்திற்குக் கீழே, மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம் என்ற மூன்று ஒருங்கிணைவுச் செயல்பாட்டு மையங்கள் (synergic centers) உள்ளன. இங்குதான் அனைத்து நனவிலிச் செயல்பாடுகளும் உயிரியல் சார்ந்தவற்றை உளவியல் … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 41

சௌந்தர்யலஹரீ – 41

தவாதா*ரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்யபரயா நவாத்மானம் மன்யே நவரஸமஹாதாண்டவநடம் உபா*ப்யாமேதாப்*யாமுதயவிதி*முத்திஶ்ய தயயா ஸனாதா*ப்*யாம் யஜ்னே ஜனகஜனனீமஜ்ஜகதிதம் பாடல் - 41 லாஸ்ய நடமிடும் ஸமயத்துடனும் தாண்டவமாடும் ஆடலரசனுடனும் மூலாதாரத்தில் புதியதாய் அமைந்த உன்னை தியானிக்கிறேன் ஒன்பது சுவைகளையும் வெளிப்படுத்தி இருவரும் இணைந்து இவ்வுலகை மீண்டும் பிறப்பித்து தாய்தந்தையரென அமைகின்றனர் ** கன்னியொருத்தி மணமகளாகிறாள். அன்புநிறைந்த சுற்றத்தாரின் அருளும் ஆசியும் கொண்டு மணவினை கொள்கிறாள். மணவறைக்குள் நுழைந்தபின்னர் அந்நாள்வரை அவள் எதுவாக இருந்தாளோ அப்படி தன்னை அவளால் … Continue reading சௌந்தர்யலஹரீ – 41

ஶ்ரீசக்ர தியானம் – 40

தம் ஸர்வஸம்பத்ப்ரதா ஆன்ம தீக்கை அளிப்பவளே, அன்னையே, நீ உன் இறைவனோடு இணைகையில் ஆழி தன்னை உயர்த்திக்கொண்டு ஆதவனிடம் செல்கிறதா அல்லது பகலவன் கடல் மீது ஒளிர்கின்றானா? சிறிய நீர்த்துளி சூரியனைக் கண்டதும் சிறகு முளைத்து நீராவியென வளிமண்டலத்தில் ஏறும் பிரபஞ்ச முக்கியத்துவம் வாய்ந்த சின்னஞ்சிறு நிகழ்வை யார் கவனிக்கிறார்கள்? ஒரு துளியின் மேலேற்றம் மழைமேகம் உருவாவதை தொடங்கி வைக்கிறது. கணம் கணமென, ஒவ்வொரு நாளும் கீழ்நோக்கிப் பொழியும் சூரியனின் கருணை, ஆழியை மேலெழும் மேகமாக உருமாற்றிக்கொண்டிருக்கிறது. … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 40

சௌந்தர்யலஹரீ – 40

தடித்வந்தம் ஶக்த்யா திமிரபரிபந்தி*ஸ்பு*ரணயா ஸ்பு*ரன்னானாரத்னாப*ரணபரிணத்தே*ந்த்ரத*னுஷம் தவ ஶ்யாமம் மேக*ம் கமபி மணிபூரைகஶரணம் நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபு*வனம் பாடல் - 40 அணிகலன்களும் அருமணிகளும் பதித்த இந்திரவில்லேந்தி அனைத்திருளையும் அகற்றும் மின்னல் மிடைந்த கருமேகமென  மணிபூரகத்தில் உறையும் சக்தியான உன்னையும் உன்னுடன் இணைந்த பசுபதியையும் வணங்குகிறேன். அரனின் எரிநெருப்பில் சாம்பலென எரிந்த முப்புரங்களும் உன் மழையால் குளிர்கின்றன ** முதிர்கரு கருப்பையில் இருக்கையில், வளரும் குழந்தை எதையும் பார்ப்பதோ கேட்பதோ இல்லை. அது சுவாசிப்பதில்லை, உண்பதில்லை. அதற்கென … Continue reading சௌந்தர்யலஹரீ – 40