ஏற்பின் ரசவாதம்
பிறந்த மண்ணை நீங்கி வெகுதூரம் சென்றுவிட்டாய் என்றாலும் உன் வீட்டுத் திண்ணையில் சாய்ந்திருப்பது போல் எளிதாக சுவாசிக்கிறாய் ஏதோ மொழிபேசுவோரும் ஏதோ வழக்கம்கொண்டோருமான உன்னை எதிர்கொண்ட வண்ணம் உள்ள அன்னியரையெல்லாம் நெடுநாட்களுக்குப்பின் காணும் உறவினர் போல வாழ்த்துகிறாய் மிக எளிதாக சமநிலை குலையாமல் ஒரு புனிதருக்கே உரிய கண்ணியத்தோடு பிறரின் ஆன்மாவில் கரைந்தழியும் ரகசியத்தை உன்னிடமிருந்து நான் கற்கவேண்டும்