இன்று
சற்று முந்தி வந்த சூரியன்
என்
ரோஜாவின் இதழ்களுக்குள்
தன் பொற்கதிர்களால்
நறுமணத்தை நிரப்பியது.
நான் உன்னைத் தேடினேன்.
நீ உறங்கிக் கொண்டிருந்தாய்
மாசு மறுவற்ற ஏதோ ஆழத்தில்
மூடிய கண்களுடன்
—
வெட்கத்தால்
என் தலை கவிழும்படி
மனம் மயக்கும்
ஒரு புன்னகையே
உனது பதில்
—
ஆனால்
படிகம் போல
தெளிவாகவும் துல்லியமாகவும்
நீயிருக்கும்போது
நான் என்ன செய்ய முடியும் –
ஒரு புத்தனைப்போல
புலன்கள் அணையும் ஆழத்திற்கு
மெளனமாக
திரும்பிச் செல்வதைத் தவிர?
—
(My Inner Profile தொகுப்பிலிருந்து)
Like this:
Like Loading...
Beautiful poem!