ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 31

அனுபவமாதியிலொன்னிரிக்கிலல்லா தனுமிதியில்லிது முன்னமக்ஷியாலே அனுபவியாததுகொண்டு தர்ம்மியுண்டெ ன்னனுமிதியாலறிவீலறிஞ்ஞிடேணம் (ஆத்மோபதேச சதகம் - பாடல் 31) [அனுபவம் ஆதியில் ஒன்னிரிக்கிலல்லாதெ அனுமிதியில்ல இதுமுன்னமக்ஷியாலே அனுபவியாததுகொண்டு தர்ம்மியுண்டென்னு அனுமிதியால் அறிவில் அறிஞ்ஞிடேணம்] முன்னனுபவமின்றி அனுமானமில்லை முன்னம் இதை கண்டதில்லை என்பதனால் தர்ம்மி அனுமானத்தால் அறியப்படுவதில்லை என்பதறிந்திடல் வேண்டும் * இனி நாம் காண இருக்கும் மூன்று பாடல்கள் நமது மெய்த்தேட்டத்தில் நமக்கு உதவக்கூடிய வழிமுறையை அளிப்பவை. நாமிருக்கும் உலகு குறித்து மூன்று அடிப்படை கேள்விகள் நமக்கு எழக்கூடும்? ‘பொருள் என்பது … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 31

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 30

ஜடமறிவீலறிவின்னு சிந்தையில்லோ திடுகயுமில்லறிவென்னறிஞ்ஞு ஸர்வம் விடுகிலவன் விஶதாந்தரங்கனாய் மே லுடலிலமர்ன்னுழலுன்னதில்ல நூனம்                               (ஆத்மோபதேச சதகம் - பாடல் 30) அசைவற்றது அறிவதில்லை; அறிவுக்கோ எண்ணமில்லை அது ஏதும் உரைப்பதுமில்லை; அறிவே அனைத்துமென்றறிந்தபின்  அகம் எல்லையிலாது விரிகிறது  அகம் விரிந்தவன் உடலுள் சிறைப்பட்டுழலுவதில்லை * தாயின் கருவறைவிட்டு இவ்வுலகிற்கு வரும் குழந்தை அளவுக்கதிகமான வெப்பத்தையும், தண்மையையும், ஒளியையும்தான் முதலில் எதிர்கொள்கிறது. பிறவி என்பதே வலிமிக்கது. குழந்தை பெரும் அழுகையுடன்தான் இந்த உலகிற்கு அனுப்பிவைக்கப்படுகிறது. குழந்தையின் தொடக்ககால நடத்தைகளில் … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 30

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 29

மனமலர் கொய்து மஹேஶ பூஜ செய்யும் மனுஜனு மற்றொரு வேல செய்திடேண்ட வனமலர் கொய்துமதல்லயாய்கில் மாயா மனுவுருவிட்டுமிரிக்கில் மாய மாறும் (ஆத்மோபதேச சதகம் - பாடல் 29) மனமலர் கொண்டு இறைபோற்றுபவர் பிறிதொரு  வினையாற்ற வேண்டியதில்லை கான்மலர் கொய்க; இல்லையெனில் மாயையின் மந்திரம் ஓதவே மாயை மறையும் * முதல் பாடலிலேயே இரண்டு எதிரெதிர் உலகங்களை கண்டோம் - ஒன்று பொருட்களால் நிரம்பிய புற உலகு; மற்றொன்று எண்ணங்களாலும் புலனுணர்வுகளாலும் நிறைந்த நனவோடை போன்ற அக உலகு.  … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 29

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 28

அடிமுடியற்றடிதொட்டு மௌலியந்தம் ஸ்ஃபுடமறியுன்னது துர்ய போதமாகும்; ஜடமறிவீலது சிந்த செய்து சொல்லு ன்னிடையிலிருன்னறிவல்லறிஞ்ஞிடேணம் (ஆத்மோபதேச சதகம் - பாடல் 28) அடிமுடி இல்லாது, அடி முதல் முடி வரை தெள்ளென அறியப்படுவது துரிய நனவு ஜடம் அறிதலற்றது; இது புரிந்தபின் இடையில் இருப்பது அறிவல்ல என்றறிக! * முந்தைய பாடலில் அகம் என்பது, தன்னிலிருந்து தோன்றியதும் முழுமையான இருளில் தன்னை மறைத்துக்கொண்டிருப்பதுமான தூய நனவென வரையறுக்கப்பட்டது. இதிலிருந்து, தன்னையறியாத இருளொன்றும் தன்னை அறிந்ததாக முழுதறியும் ஒரு அறிவும் … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 28

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 27

இருளிலிருன்னறியுன்னதாகுமாத்மா வறிவதுதானத நாமரூபமாயும் கரணமொடிந்த்ரிய கர்த்த்ருகர்மமாயும் வருவது காண்க! மஹேந்திரஜாலமெல்லாம் (ஆத்மோபதேஶ ஶதகம் - பாடல் 27) இருளிலிருந்தபடி தன்னையறியும் அகம் அதறியும் அதன் பெயர் வடிவம் செயல் புலன் வினையென அனைத்தும் பெரும் மாயாஜாலம் சீட்டுக் கட்டில் முதலில் உள்ளது கோமாளியை குறிக்கிறது, இறுதியாக உள்ளது மந்திரவாதியை. கோமாளியில் தொடங்கி மந்திரவாதியில் முடிவதற்குள் நீதிபதி, மரணம் என வாழ்வின் பல கூறுகளைக் குறிக்கும் சீட்டுகளை நாம் காண்கிறோம். அதேபோல், நம் வாழ்வும் கற்றறியா கோமாளியில் துவங்கி … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 27

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 26

அவயவமொக்கெயமர்த்தியாணியாய் நி ன்னவயவியாவியெயாவரிச்சிடுந்நு; அவனிவனென்னதினாலவன் நினய்க்கு ன்னவஶதயாமவிவேகமொன்னினாலே (ஆத்மோபதேஶ ஶதகம் - பாடல் 26) ஆணிபோல் உறுப்புகளை ஒன்றிணைக்கும் ஆவிபோன்றதை மூடியிருக்கும் உடல்கொண்டவன் அவிவேகத்தாலே ‘அவன்’ ‘இவன்’ என எண்ணிச் சோர்கிறான் பல உறுப்புகளால் ஆன நமது உடல், வாழும் உயிர் என்ற ஒன்றால் பிணைக்கப்பட்டுள்ளது. ஆவித்தன்மை கொண்ட மூச்சு எனும் முகமையால் ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டமைக்கப்பட்ட ஒரு உடலின் தோற்றம் பிறிதொரு உடலிலிருந்து மாறுபடுவதால், அனைத்து உயிரிகளிலும் உறையும் உயிர் எனும் பொருள் ஒன்றே … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 26

ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 25

ஒருவனு நல்லதுமந்யனல்லலும் சேர் ப்பொரு தொழிலாத்மவிரோதியோர்த்திடேணம் பரனு பரம் பரிதாபமேகிடுன்னோ ரெரி நரகாப்தியில் வீணெரிஞ்ஞிடுன்னு (ஆத்மோபதேச சதகம் - பாடல் 25) நன்மை ஒருவருக்கும் தீமை பிறருக்கும்  பயக்குமெச் செயலும் அகத்திற்கெதிரியென அறியவேண்டும் பிறர்க்குப் பெருவலி அளிப்போர் யாரும் நரகெனும் எரிகடலில் வீழ்ந்தெரிவார் திண்ணம் முந்தைய பாடலில் அனைவரின் மகிழ்ச்சிக்குமான நேர்மறை வழியைக் கூறிய நாராயண குரு இங்கே தீமையைக் கொணரும் எதிர்மறை வழியை வைத்து சமன்செய்கிறார். வரலாறு நெடுக, புனிதர்களும், மெய்யியலாளரும், மீட்பர்களும், ஆசான்களும் என … Continue reading ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 25

சௌந்தர்யலஹரீ

[சங்கரர் எழுதிய ‘சௌந்தர்யலஹரீ’ நூறு பாடல்களைக் கொண்டது. இதில் முதல் நாற்பத்தியோரு பாடல்கள் அடங்கிய ‘ஆனந்தலஹரீ’ எனும் பகுதிக்கு குரு நித்ய சைதன்ய யதி எழுதிய உரை] அறிமுகம் வேதாந்தத்தின் மரபார்ந்த உளவியலின்படி முழுமுதல் என்பது அறிவெல்லைகடந்த ‘பரா’வாகவும் உள்ளார்ந்த ‘அபரா’வாகவும் கருதப்படுகிறது. தாந்திரீகம் சற்று வேறுவகையில் இவற்றை முறையே சிவன் என்றும் சக்தி என்றும் கூறும்.  புராணங்கள் சிவனை முப்புரம் எரித்த திரிபுராந்தகன் என்று வர்ணிக்கும். புரம் அல்லது நகரம் என்பது மானுடம் சார்ந்த பல்வகைக் … Continue reading சௌந்தர்யலஹரீ

ஶ்ரீசக்ர தியானம்

ஶ்ரீசக்ரம் என்பது பிரபஞ்ச அமைப்புக்குள் ஒருவரது இயக்கத்தை ஆதிமொழி வழியே விளக்குவது. இந்த வரைபடத்தில் (யந்த்ரம்) உள்ள மேற்சுட்டி நிற்கும் நான்கு முக்கோணங்கள் முழுமுதல் ஆன்மாவை அல்லது பிரபஞ்ச நனவை (புருஷன்) குறிப்பன. கீழ்சுட்டி நிற்கும் ஐந்து முக்கோணங்கள் ஐம்பெரும் மூலப்பொருட்களால் ஆன இயற்கையை (ப்ரக்ருதி) குறிப்பவை. மெய்மையின் எந்தக் கூறையும் முழுக்க முழுக்க உடல்சார்ந்ததாகவோ, முழுமையாக ஆன்மா சார்ந்ததாகவோ பார்க்க முடியாது எனும்படி அவை ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. இதழ்களால் அமைந்த இரண்டு வட்டங்கள் முழுமையாக மலர்ந்த … Continue reading ஶ்ரீசக்ர தியானம்

ஶ்ரீசக்ர தியானம் – 53

ஸௌம் நிறைவளிக்கும் அன்னையே! எம்மை தளைப்பதற்கும் எமக்கு மீட்பளிப்பதற்கும் உரிமை கொண்டவள் நீ. உன் விருப்பம் அதுவென்றால், இன்றுடன் எமது வாழ்வெனும் ஆடல் முடிவுக்கு வரும். அவ்வாறில்லையெனில், எமது பெற்றிக்கேற்ப இன்னொரு உருமாற்றச் சுழற்சிக்குள் செல்வோம். தளைப்பதற்கும், உருமாற்றச் சுழற்சிக்கும் என ஒரு விதியை (tribasic law) வைத்திருக்கிறாய். ஆன்மாவை, முழுமையான விடுதலை கொண்ட அதன் ஆட்சிப்பீடத்தில் மீண்டும் நிறுவுவதற்கு வேறொரு விதியை வைத்திருக்கிறாய்.  படைப்பெனும் விண்மீன் கூட்டத்தில் பல மும்மைகள் உன்னால் வைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக இறைக் … Continue reading ஶ்ரீசக்ர தியானம் – 53